தொழில்நுட்பம்

வீட்​டைக் கட்​டிப் பார்க்கலாம்! - எளிதில் கற்கலாம் ஏஐ 18

சரவணன் பார்த்தசாரதி

வீட்​டுமனைத் திட்​டம், உட்​புற வடிவ​மைப்பு (Interior Design) போன்ற கட்​டிடக்​கலை வரைபடங்​களை உரு​வாக்​கு​வதற்​குப் பல வாரங்​கள்​கூட ஆகும். பாரம்​பரிய வடிவ​மைப்பு மென்​பொருள்​களில் சுவர்​கள், அறைகள், அளவீடுகளை முறை​யாக வரைவதற்​குப் பெரும் உழைப்​பும் திறமையும் தேவை. இதற்​கான தீர்​வாக உரு​வெடுத்​துள்​ளது Maket AI என்​னும் செய்​யறி​வுத் தளம்.

கட்​டிடத்​தில் இருக்க வேண்​டிய அறைகளின் எண்​ணிக்கை, பரிமாணங்​கள், ஏனைய தேவை​களை (Adjacency Constraints) உள்​ளீடு செய்த உடனேயே தள வரைபடங்​களை (Floor Plans) உரு​வாக்​கித் தந்​து​விடு​கிறது இக்​கருவி.

ஆக்​கமுறை தள வரைபட உரு​வாக்​கம் (Generative Floor Plan Generation)

Maket AI தளத்​தில் பயனர்​கள் தங்​களுக்​குத் தேவை​யான படுக்​கையறைகள், குளியலறைகள், சமையலறைகளின் எண்​ணிக்​கையைக் குறிப்​பிட்டு, அவற்​றின் அளவு​களை​யும் (Dimensions) தட்​டச்சு செய்ய வேண்​டும். அத்​துடன், எந்த அறை எங்கே இருக்க வேண்​டும் என்​ப​தையும் (Room Adjacency) பயனரே நிர்​ணயிக்​கலாம். தரப்​படும் தகவல்​களுக்கு ஏற்ப, இக்​கருவி தள வரைபடங்​களை உரு​வாக்கி வழங்​கு​கிறது.

பல மாடிக் கட்​டிட வடிவ​மைப்பு (Multi-Story Plan Generation)

ஒற்​றைத் தள வீடுகள் மட்​டுமல்​லாது பல்​லடுக்​கு​களைக் கொண்ட (Multi-story up to 4 floors) குடி​யிருப்​பு​களை​யும் இத்​தளத்​தில் உரு​வாக்க முடியும். மாடிகளுக்கு இடையேயான படிக்​கட்டு அமைப்​பு​களைக்​கூட இது துல்​லிய​மாகக் கணக்​கிட்டு வடிவ​மைக்​கிறது.

முப்​பரிமாணக் காட்​சிப்​படுத்​தல் (3D Visualization)

இரு பரிமாண (2D) வரைபடங்​களை உரு​வாக்​கு​வதோடு அவற்றை முப்​பரிமாணக் காட்​சிகளாகவும் (3D Renders) மாற்​றிக்​காட்ட இத்​தளம் உதவு​கிறது. இதன் மூலம் வாடிக்​கை​யாளர்​கள் தாங்​கள் கட்​ட​விருக்​கும் வீட்​டின் உட்​புறத் தோற்​றத்தை முன்​கூட்​டியே தெளிவாகப் புரிந்​து கொள்ள முடியும்.

மெய்​நிகர் வடிவ​மைப்​பும் வடிவ​மைப்பு மாற்​றங்​களும் (Virtual Designer & Restyling)

உரு​வாக்​கப்​பட்ட அறைகளை பல்​வேறு பாணிகளில் (Styles) காட்​சிப்​படுத்த உதவும் ‘Virtual Designer’ வசதி​யும் இதில் உள்​ளது. பயனர்​கள் தங்​களுக்​குப் பிடித்​த​மான வண்​ணங்​கள், அறைக்​கலன்​கள் (Furniture), அலங்​காரங்​களைக் கட்​டளைகள் (Prompts) மூலம் எளிதாக மாற்​றியமைக்க முடியும்.

குறைந்த நேரத்​தில் அடிப்​படை வடிவ​மைப்பு (Time Efficiency & Prototyping)

முதற்​கட்ட வடிவ​மைப்​பு​களை (Concept Generation) மிக விரைவாகச் சோதித்​துப் பார்க்க இத்​தளம் உதவு​கிறது. இதன் மூலம் வாடிக்​கை​யாளர்​களின் எதிர்​பார்ப்​புக்கு ஏற்​றவாறு உடனுக்​குடன் வடிவ​மைப்​பில் மாற்​றங்​களைச் செய்​து​காட்ட முடி​கிறது.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறுபடுகிறது?

AutoCAD போன்ற கரு​வி​களில் சுவர் உள்​ளிட்ட ஒவ்​வொரு பாகத்​தையும் துல்​லிய​மாக வரைவதற்​குத் தேர்ந்த தொழில்​நுட்​பத் திறனும் அதிக நேர​மும் தேவைப்​படும். ஆனால், Maket AI கரு​வியோ, வெறும் சொற்​களின் வழியே பயனர் உள்​ளிடும் அளவீடுகளைக் கொண்டே உடனடி​யாகத் ஆரம்​பக்​கட்ட வரைபடங்​களை (Schematic Designs) உரு​வாக்​கித் தந்​து​விடு​கிறது.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

இது பொறி​யாளர்​கள், கட்​டிடக்​கலை வல்​லுநர்​கள் (Architects), ஒப்​பந்​ததா​ரர்​கள், வீட்​டுமனை வர்த்​தகர்​கள், கட்​டிடக்​கலை மாணவர்களுக்குப் பயன்படுகிறது. மனிதர்​களின் கற்​பனைத் திறனையும் கணினி ஆற்​றலை​யும் ஒன்​றிணைத்து எளிய முறையில், வேக​மாகக் கட்​டிடங்​களை வடிவ​மைக்க Maket AI பெரிதும் உதவு​கிறது. https://app.maket.ai/

செய்யறிவு விதி

செய்​யறிவால் உரு​வாக்​கப்​பட்ட படங்​கள், உரைகள், ஏனைய படைப்​பு​களை வணிக ரீதி​யாகப் பயன்​படுத்​து​வதற்கு அனுமதி இருக்​கிறதா எனச் சரி பார்த்​துக்​கொள்​ளுங்​கள். பதிப்​புரிமைச் சட்​டங்​களை எப்​போதும் மதி​யுங்​கள். சட்​டத்​துக்கு உட்​பட்ட முறை​யில் மட்​டுமே செய்​யறிவைப் பயன்​படுத்​துங்​கள். எடுத்​துக்​காட்​டாக ஒரு கட்​டளை: Generate a residential floor plan for a 40x40 feet plot, including 2 bedrooms with attached bathrooms, a study room, open kitchen, and car parking space.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT