தொழில்நுட்பம்

கோடிங் எழுத கைகொடுக்​கும் நண்பன் | எளிதில் கற்கலாம் ஏஐ 17

சரவணன் பார்த்தசாரதி

இன்​றைய டிஜிட்​டல் உல​கில் நிரலாக்​கம் (Coding), ரோபோடிக்ஸ் (Robotics), செய்​யறிவு (AI) உள்​ளிட்ட தொழில்​நுட்​பங்​களைச் சிறு வயதிலேயே கற்க வேண்​டிய அவ​சி​யம் உள்​ளது. ஆனால், ஆரம்​பநிலை மாணவர்​கள் பைதன் (Python) போன்ற மொழிகளைக் கற்​ப​தில் சவால்​களை எதிர்​கொள்​கின்​றனர். இந்​தச் சவாலுக்​கான சிறந்த தீர்வை வழங்கி, குழந்​தைகளும் மாணவர்​களும் விளை​யாட்​டாகவே கோடிங் கற்​றுக்​கொள்ள உதவும் முன்​னணி கல்வி தளம்​தான் PictoBlox AI.

ஸ்கிராட்ச் (Scratch) போன்ற எளிய பிளாக்-அமைப்​பிலான நிரலாக்க முறையையும் (Block-based Coding), செய்​யறி​வுத் தொழில்​நுட்​பங்​களை​யும் ஒன்​றிணைத்து உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​தக் கருவி, மாணவர்​கள் தாங்​களே சொந்​த​மாக விளை​யாட்​டுகளை​யும் ரோபாட்​களை​யும் வடிவ​மைக்க உதவு​கிறது.

பிளாக்-பேஸ்டு பைதன் கோடிங் (Block & Python Coding):

PictoBlox தளத்​தில் உள்ள வண்​ணமய​மான கட்​டிகளை (Blocks) ஒன்​றிணைப்​ப​தன் மூலம் நிரலாக்​கத்​தைக் கற்​றுக்​கொள்​ளலாம். ஓரளவுக்​குத் தேர்ச்​சிபெற்ற பிறகு, ஒரே கிளிக்​கில் அந்த பிளாக்​கு​களை நேரடி​யாக பைதன் (Python) குறியீடுகளாக மாற்​றிப் பார்க்​கலாம். இது ஆரம்ப நிலை​யில் இருந்து உயர்​தர நிரலாக்​கக் கல்வி நிலைக்​குச் செல்ல உதவும் பாலம்​போல் அமைந்​துள்​ளது.

செய்​யறி​வும் இயந்​திரக் கற்​றலும் (AI & Machine Learning Extensions):

இந்​தக் கரு​வி​யில் செய்​யறிவு, இயந்​திரக் கற்​றல் அம்​சங்​கள் சிறப்​பாக ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளன. மாணவர்​கள் தங்​கள் கணி​னி​யின் மூலமாகப் படங்​களைப் பயிற்சி செய்து (Train Models), முகம் (Face), சைகை (Gesture) ஆகிய​வற்றை வகைப்​படுத்​தது​தல், பொருள்​களைக் கண்​டறிதல், குரல் உணர்​தல் உள்​ளிட்ட செய்​யறிவு சார்ந்த திட்​டங்​களை எளிதாகச் செய்​துபார்க்க முடியும்.

ரோபோடிக்​ஸும் ஹார்ட்​வேர் ஒருங்​கிணைப்​பும் (Robotics & Hardware Integration):

PictoBlox தளத்தை வெறும் கணி​னித்​திரை​யுடன் சுருக்​கி​விடா​மல், Arduino, ESP32 உள்​ளிட்ட பல்​வேறு STEM வன்​பொருட்​களு​டனும் இணைக்க முடியும். மாணவர்​கள் எழுதும் குறியீடுகள் வழியே நிஜ உலக ரோபாட்​களை​யும் சென்​சார்​களை​யும் கட்​டுப்​படுத்​திப் பார்க்க இயலும் என்​ப​தால் அவர்​களின் ஆர்​வம் பல மடங்கு அதி​கரிக்​கிறது.

கிளவுட் அடிப்​படை​யி​லான வகுப்​பறை மேலாண்மை (Cloud LMS for Educators):

ஆசி​ரியர்​களுக்​கென பிரத்​யேக​மான ‘PictoBlox Classroom’ வசதி உள்​ளது. இதன் மூலம் மாணவர்​களின் திட்​டப்​பணிகளை மதிப்​பீடு செய்​ய​வும், வீட்​டுப்​பாடங்​களை வழங்​கவும், மாணவர்​களின் முன்​னேற்​றத்​தைத் தொடர்ந்து கண்​காணிக்​கவும் முடியும்.

ஆக்​கமுறை செய்​யறி​வும் ஊடாடும் அம்​சங்​களும் (Generative AI & Interactive Features):

அரட்​டைச் செயலிகளை​யும் (Chatbots), புகைப்​படங்​களை​யும் உரு​வாக்​கும் கரு​வி​களை மாணவர்​களே வடிவ​மைக்க உதவும் ஆக்​கமுறை செய்​யறிவு அம்​சங்​களும் இதில் உள்​ளன.

ஆக்​மென்​டெட் ரியாலிட்​டியும் IoT ஒருங்​கிணைப்​பும் (AR & IoT Integration):

ஆக்​மென்​டெட் ரியாலிட்டி (AR), ஐஓடி (IoT) கரு​வி​களு​டன் இணைத்​துக்​கொள்​ளும் வசதி​யும் இதில் உள்​ளது. இத​னால் மாணவர்​கள் தங்​கள் டிஜிட்​டல் படைப்​பு​களை நிஜ உல​கச் சூழலுடன் நேரடி​யாக இணைத்​துச் சோதித்​துப் பார்க்​கலாம்.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறுபடுகிறது?

Scratch போன்​றவை எளிய விளை​யாட்​டுகளை மட்​டுமே வடிவ​மைக்க உதவு​கின்​றன. PictoBlox AI தளமோ நிரலாக்க முறைகளோடு இயந்​திரக் கற்​றல், IoT, ரோபோடிக்ஸ் உள்​ளிட்​ட​வற்​றையும் ஒரே இடத்​தில் கற்​றுக்​கொள்​ளும் வாய்ப்பை வழங்​கு​கிறது.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

பள்ளி மாணவர்​கள், STEM கல்வி பயிற்​றுநர்​கள், கணினி அறி​வியல் ஆசி​ரியர்​கள், சிறு வயது முதலே தொழில்​நுட்​பக் கல்​வி​யில் ஆர்​வம் கொண்ட குழந்​தைகள்.

குழந்​தைகளின் ஆர்​வத்​தைச் செய்​யறி​வின் துணை​யுடன் படைப்​பு​களாக மாற்​றியமைக்க உதவுவதில் PictoBlox AI-இன் பங்கு அளப்​பரியது. https://pictoblox.ai/

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.16

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT