தொழில்நுட்பம்

கற்பித்தல் எளிது! | எளிதில் கற்கலாம் ஏஐ 13

சரவணன் பார்த்தசாரதி

ஆசி​ரியர்​கள் முன்​னுள்ள மிகப்​பெரிய சவால் வகுப்​பறை​யில் உள்ள ஒவ்​வொரு மாணவரின் வாசிப்​புத்​திறனுக்​கும் ஏற்​பப் பாடக்​குறிப்​பு​களைத் தயாரிப்​ப​து​தான். தாமத​மாகக் கற்​கும் மாணவர்​களுக்கு எளிய சொற்​களி​லும் சராசரி மாணவர்​களுக்​குத் தகுந்த வாசிப்பு நிலை​ யிலும் பாடங்​களை மாற்றி எழுது​ வதற்​குப் பல மணிநேரம் தேவைப் ​படும். இதற்​கான சிறந்த தீர்வை வழங்​கு​கிறது Diffit என்​னும் கல்வி சார்ந்த செய்​யறி​வுத் தளம்.

பாடப்​பகுதி, யூடியூப் காணொளி (YouTube URLs), இணை​யப் பக்​கம், ஆவணம் போன்​றவற்​றைக் குறுகிய காலத்​தில் மாணவர்​கள் பயிலும் வகுப்​புக்​கும் (Grade Level) வாசிப்​புத்​திறனுக்​கும் ஏற்ப இது மாற்​றித் தந்​து​விடு​கிறது.

வகுப்​புக்கு ஏற்ற பாடம் (Grade-Level Differentiation): Diffit AI தளத்​தில் சிக்​கலான அறி​வியல் கருத்​துகளையோ வரலாற்​றுப் பாடங்​களையோ கொடுத்து எளிய சொற்​களில் மாற்றி அமைத்​துக்​கொள்ள முடியும். அதன் வழியே அந்​தப் பாடத்தை அனைத்து மாணவர்​களும் விளங்​கிக்​கொள்ள வழி பிறக்​கிறது.

பயிற்​சித்​தாள்​களும் கேள்​வி​களும் (Worksheets & Quiz Generation): பாடக்​குறிப்​பு​களை உரு​வாக்​கு​வதோடு நின்​று​விடா​மல், அந்​தப் பாடத்​தின் சுருக்​கம் (Summary), கலைச்​சொற்​கள் (Vocabulary list with definitions), தெரிவு வினாக்​கள் (Multiple Choice Questions) உள்​ளிட்​ட​வற்​றோடு சிந்​தனையைத் தூண்​டும் திறந்த வகை வினாக்​களை​யும் (Open-ended Questions) இது தானாகவே படைத்து அளிக்​கிறது.

பன்​மொழித்​திறம் (Multilingualism): ஆங்​கிலத்​தில் உள்ள பாடப்​பகுதி​களைத் தமிழ் உள்​பட 50க்​கும் மேற்​பட்ட மொழிகளில் மொழி பெயர்க்​கும் வசதி​யும் இதில் உள்​ளது. இதன் மூலம் தாய்​மொழி​யில் கற்​பிக்​கும் ஆசி​ரியர்​களுக்​கும் மாற்று மொழி கற்​போருக்​கும் இந்​தத் தளம் பெரிதும் உதவு​கிறது.

பதிவேற்​றுதலும் பிற தளங்​களு​டனான உறவும் (Export & Integration): Diffit மூலம் உரு​வாக்​கப்​படும் பாடப்​பயிற்​சிகளை நேரடி​யாக Google Slides, Google Docs, PDF வடிவங்​களில் பதி​விறக்​கம் செய்து​கொள்​ளலாம். மேலும், கூகுள் கிளாஸ்​ரூம் (Google Classroom) போன்ற தளங்​களு​டன் நேரடி​யாக இணைத்து மாணவர்​களுக்கு வீட்​டுப்​பாட​மாகக் (Digital Assignments) கொடுத்​து​விட முடியும்.

மாணவர்​களை மையப்​படுத்​திய வார்ப்​புருக்​கள் (Student-Ready Templates): உரு​வாக்​கப்​படும் பாடப்​பகுதி​களை உரைநடை வடி​வில் மட்​டும் தராமல் Frayer Model, Graphic Organizers, Venn Diagrams போன்ற கற்​பித்​தல் வார்ப்​புருக்​களாகவும் (Templates) மாற்​றித்​தரு​வது இதன் இன்​னொரு சிறப்பு.

மூல ஆதா​ரங்​களை மாற்​றி யமைத்​தல் (Primary Source Adaptation): பழமையான ஆவணங்​கள், கடிதங்​கள், இலக்​கியப் பகுதி​களை மூலக்​கருத்து சிதையாமல் மாணவர்​களின் தற்​போதைய புரிதலுக்கு ஏற்ப எளிமைப்​படுத்​தித் தரு​வதில் Diffit சிறப்​பாகச் செயல்​படு​கிறது.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

வழக்​க​மான செய்​யறி​வுக் கருவி மேலோட்​ட​மான பதில்​களை மட்​டுமே தரும். ஆசி​ரியர்​கள் அதை வகுப்​பறைப் பயன்​பாட்​டுக்கு ஏற்​றவாறு வடிவ​மைக்க வேண்​டியதிருக்​கும். மாறாக, Diffit கரு​வியோ பாடத்​திட்​டத் தரநிலைகளுக்கு ஏற்ற பாடக்​குறிப்​பு​களை​யும் அச்​சிடத் தகுந்த அழகான பயிற்​சித்​தாள்​களை​யும் (Printable Activity sheets) வழங்​கி​விடுவ​தால் ஆசி​ரியர்​களுக்​குப் பல மணிநேரம் மிச்​ச​மாகிறது.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

பள்ளி ஆசி​ரியர்​கள், சிறப்​புக் கல்​வியாளர்​கள் (Special Educators), மொழிப் பயிற்​றுநர்​கள், கல்வி நிறு​வனங்​கள். ஆசி​ரியர்​களின் பாடத்​தயாரிப்பு நேரத்​தைக் கணிச​மாகக் குறைத்து, வகுப்​பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்​கும் சமமான கற்​றல் வாய்ப்பை வழங்​கு​வதில் Diffit முதன்மை இடத்​தைப் பெற்​றுள்​ளது.

https://app.diffit.me/

செய்யறிவு விதி

செய்​யறி​வுக் கரு​வி​கள் தரும் முதல் பதிலோடு திருப்​தி​யடைந்​து​விட வேண்​டாம். பெற்ற தகவல்​களில் சந்​தேகம் இருந்​தாலோ, மேலதி​கத் தகவல் தேவைப்​பட்​டாலோ தொடர்ந்து கேள்வி கேளுங்​கள். அப்​படிச் செய்​வதன் வழியே மிகச்​சரியான பதில்​களைப் பெற முடியும்.

எடுத்​துக்​காட்​டாக ஒரு கட்​டளை

Create an engaging Class 6 History lesson on the Indus Valley Civilization with simple explanations, real-life examples, vocabulary, multiple-choice questions, critical-thinking activities, group tasks, and an answer key for students.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT