தொழில்நுட்பம்

கணக்கீட்டு அறிவின் களஞ்சியம் | எளிதில் கற்கலாம் ஏஐ 7

சரவணன் பார்த்தசாரதி

கணிதம்தான் இந்தப் பிரபஞ் சத்தின் மொழி என்றால் இயற்பியலைச் செவ்வியல் கவிதை என்று கூறலாம். ஆனால், கணிதத்தைக் கற்றுக்கொள்ள முயலும்போது பலரும் சவால் களை எதிர்கொள்கின்றனர். இதில் பள்ளிக்குழந்தைகள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அடக்கம். உண்மையில் கணிதம் அவ்வளவு சிக்கலானதல்ல. சரியான முறையில் கற்பிக்கப் பட்டால் கணிதத்தையும் இயற்பி யலையும் யார் வேண்டுமானாலும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ள முடியும்.

சிக்கலான கணிதச் சமன்பாடு களுக்கு நேரடி விடையையும் அவற்றின் பின்னுள்ள துல்லிய மான கணக்கீடுகளையும் வழங்கு கிறது Wolfram Alpha என்னும் கணக்கீட்டு அறிவுப்பொறி (Computational Knowledge Engine).

ஏனைய தேடுபொறிகளைப் போல் வலைப் பக்கங்களை வாசித்துத் தேடித்தராமல், துல்லியமான தரவுகளையும் சக்திவாய்ந்த கணித அல்காரி தம்களையும் பயன்படுத்தி, சரியான பதில்களை உடனுக்குடன் வழங்குவதே இதன் சிறப்பு.

கணக்கீட்டு ஆற்றலும் படிமுறைத் தீர்வுகளும் (Computational Power) கணிதம், இயற்பியல், வேதியியல், பொறியியல் சார்ந்த கடினமான சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தக் கருவி நிகரற்று விளங்குகிறது. இயற்கணிதம் (Algebra), நுண்கணிதம் (Calculus), நேரியல் இயற்கணிதம் சார்ந்த கணக்குகளுக்கு விடைகளையும் அவற்றுக்கான தெளிவான படிநிலைகளையும் (Step-by-step solutions) இது வழங்குகிறது. மாணவர்கள் வீட்டுப்பாடங்களைச் சரிபார்க்கவும் கணிதக் கோட்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இது பெரிதும் உதவுகிறது.

இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) இந்தத் தளத்தைப் பயன் படுத்தும்போது குறியீடுகளையும் நிரலாக்க மொழிகளையும் உள்ளீடு செய்யவேண்டிய கட்டாயமில்லை. இயல்பான ஆங்கிலத்திலேயே (Plain English) தங்களுக்குத் தேவையான கேள்விகளைக் கேட்கலாம். எடுத்துக்காட்டாக, ‘பிதாகரஸ் தேற்றம் என்றால் என்ன?’ என்று கேட்கலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு சமன் பாட்டை உள்ளீடு செய்யலாம். அவற்றை இந்தத் தளம் சரியாகப் புரிந்து கொண்டு துல்லியமாகப் பதிலளிக்கிறது.

தரவுக் காட்சிப்படுத்தல் (Data Visualization) பதில்களை வெறும் எண்களாகத் தராமல் மிக அழகிய வரைபடங்களாகவும் (Plots and Graphs) புள்ளிவிவரக் கட்டமைப்புகளாகவும் மாற்றித் தருகிறது. பொருளாதாரம், வானி லை, நிதிநிலை, சமூக அறிவியல் சார்ந்த உண்மையான தரவுகளை ஆராய ஆராய்ச்சியாளர்களுக்கும் தரவு அறிவியலாளர்களுக்கும் இது உதவுகிறது.

பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறு படுகிறது?

மற்ற பெரிய மொழி மாதிரிகள் (LLMs) சில நேரம் தவறான தகவல்களை ஊகித்து எழுதக்கூடிய (Hallucination) வாய்ப்புள்ளது. ஆனால் Wolfram Alpha கணித, அறிவியல் உண்மைகளை எண்களின் அடிப்படையில் துல்லியமாகக் கணக்கிடுவதால் இதில் பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு.

யாருக்குப் பயன்படும்?

மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிதிப் பகுப்பாய்வாளர்கள், அறிவியல் ஆர்வலர்கள், எண் களையும் தர்க்கரீதியான உண்மைகளையும் அடிப்படை யாகக் கொண்டு இயங்கும் அனைவருக்கும் இந்தத் தளம் உதவக்கூடும். பொதுவான தகவல் களைப் பெற பல செய்யறிவுக் கருவிகள் இருக்கும் இன்றைய நிலையில் துல்லியமான கணக்கீடுகளும் அறிவியல் கோட்பாடுகளும் தேவைப்படும் இடங்களில் Wolfram Alpha தனெக்கெனத் தனி முத்திரையைப் பதித்து வருகிறது.

https://www.wolframalpha.com/

செய்யறிவு விதி: எந்தவொரு செய்யறி வுக் கருவியைப் பயன்படுத்து வதற்கும் முன், அதன் திறன் களையும் வரம்புகளையும் சரியாகப் புரிந்துகொள்வது மிக வும் அவசியம். அப்பொழுதுதான் அதை உங்கள் தேவைகளுக்குச் சரியாகப் பயன்படுத்த முடியும்.

எடுத்துகாட்டு கட்டளை (Sample Prompt):

Solve the following sixth-degree polynomial equation:

x6 - 14x4 + 49x2 - 36 = 0

Find all real and complex roots of the equation.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT