தொழில்நுட்பம்

எதையுமே பிளான் பண்ணி செய்யணும் | எளிதில் கற்கலாம் ஏஐ 2

சரவணன் பார்த்தசாரதி

செயற்கை நுண்​ணறிவு உலகில், சிக்​கலான தொழில்​நுட்​பங்​களை​விட மனிதர்​களின் மன உளைச்​சலை​யும் பணிச்​சுமை​யை​யும் நேரடி​யாகக் குறைக்​கும் எளிய கருவி​களே மிகப்​பெரிய வரவேற்​பைப் பெறுகின்​றன.

அன்​றாட வாழ்க்​கை​யிலும் அலு​வல​கத்​தி​லும் திட்​ட​மிடு​தலின் (Planning) அவசி​யம் என்ன என்​பதை நாம் அறிவோம். சரி​யான திட்​ட​மிடல் இருந்​தாலே எடுத்​துக்​கொண்ட பணி முக்​கால் பங்கு முடிந்​தது​போல்​தான். ஆனால், நாம் அனை​வருமே திட்​ட​மிடு​வ​தில் பல்​வேறு சிக்​கல்​களை எதிர்​கொள்​ளவே செய்​கிறோம். குறிப்​பாக, புதி​யதொரு திட்​டத்​தைத் தொடங்​கும்​போது, ‘இதை எங்கு தொடங்​கு​வது, எப்​படி முழு​மை​யாக்கி முடிப்​பது?’ என்​கிற பதற்​றம் நமக்கு ஏற்​படும்.

மேலும், கவனச் சிதறல் சவால் (ADHD), மனக்​கவலை (Anxiety), நரம்​பியல் தொடர்​பாக மாறு​பட்ட பண்​பு​கள் (Neurodivergent) கொண்ட மாணவர்​களும், அதிக பணிச்​சுமை​யால் திணறும் ஆசிரியர்​களும், தொழில்​முறை நிபுணர்​களும் திட்​ட​மிடு​தல் சார்ந்த பல்​வேறு சவால்​களைச் சந்​தித்​துக்​கொண்டே இருக்​கின்​றனர். இந்​தச் சிக்​கலுக்கு மிக எளிமை​யான, வியப்​பளிக்​கும் தீர்​வு​களை அளிக்​கிறது ‘Goblin Tools’ என்​னும் செய்​யறி​வுத்​தளம்.

மிகப் பிரபல​மாக இருக்​கும் சாட்​ஜிபிடி (ChatGPT), கிளாட் (Claude) போல நீண்ட கட்​டுரைகளை எழுது​வதோ வண்​ணமய​மான படங்​களை உரு​வாக்​கு​வதோ இந்​தத் தளத்​தின் நோக்​கமல்ல. மாறாக, பெரியதொரு சவாலான வேலை​யை, எளி​தில் செய்​யக்​கூடிய சிறுசிறு நடை​முறைப் படிகளாகப் பிரித்​துத் தரு​வதே இதன் முதன்​மைச் சிறப்​பு.

பெரிய இலக்​கு​களைச் சிறிய படிகளாக மாற்​றும் - ‘Magic ToDo’ ‘கட்​டுரை ஒன்றை எழுத வேண்​டும்’ என்​றோ, ‘அலு​வலக அறையைச் சீரமைக்க வேண்​டும்’ என்றோ நாம் இந்​தத் தளத்​தில் உள்​ளிட்​டால், இதன் ‘Magic ToDo’ அம்​சம் அந்​தப் பெரிய இலக்கை 5 முதல் 10 எளிய படிநிலைகளாகத் தானாகவே உடைத்​துத் தரு​கிறது. இதில் உள்ள ‘Spicy Level’ (மிள​காய்க் குறி​யீடு) வசதி​யின் மூலம், ஒரு வேலையை எந்த அளவுக்கு நுணுக்​க​மான சிறிய படிகளாகப் பிரிக்க வேண்​டும் என்​ப​தை​யும் நாமே தேர்​வுசெய்ய முடி​யும்.

நேரத்​தைக் கணித்து வேலையை ஒழுங்​கமைக்​கும் - ‘Estimator’ - ‘Compiler’ – ‘Taskmaster’ இதன் ‘Estimator’ அம்​சம் நாம் செய்ய வேண்​டிய ஒவ்​வொரு சிறிய வேலைக்​கும் தோராய​மாக எவ்​வளவு நேரம் பிடிக்​கும் என்​ப​தைக் கணித்​துக் கூறுகிறது. ‘Compiler’ அம்​சம் நம் மனதில் தோன்​றும் எண்​ணங்​களை​யும் குழப்​ப​மான குறிப்​பு​களை​யும், வரிசைப்​படுத்​தப்​பட்ட பட்​டிய​லாக (To-Do List) மாற்​றித் தரு​கிறது. இதில் இருக்​கும் ‘Taskmaster’ வசதி ஒவ்​வொரு வேலை​யை​யும் எப்​போது ஆரம்​பித்து எப்​போதைக்கு முடிக்​கிறோம், இன்​னும் எவ்​வளவு நேரம் எஞ்​சி​யுள்​ளது என்​ப​தைக் கூறுகிறது.

உரை​யாடலை​யும் தொனியை​யும் மேலாண்மை செய்​யும் - ‘Formalizer’ & ‘Judge’ இதன் ‘Formalizer’ என்​கிற அம்​சம் நாம் அவசரத்​தில் எழுதும் சாதாரண சொற்​றொடர்​களை, தொழில்​முறை சார்ந்த (Professional), கனி​வான, பொருத்​தமிகு வரி​களாக மாற்​றித்​தரு​கிறது. அதே​போல, ‘Judge’ எனும் அம்​சம் நாம் எழு​திய மின்​னஞ்​சல், தகவலின் தொனி (Tone) சரி​யாக இருக்​கிற​தா, அது வாசிப்​பவருக்கு எவ்​வாறு போய்ச்​சேரும் என்​ப​தைப் பகுப்​பாய்வு செய்து வழி​காட்​டு​கிறது. பெரிய இலக்​கு​களைக் கண்டு மலைத்து நிற்​காமல், சிறுசிறுபடிகளாக அவற்றை மாற்​று​வதன் மூலம் விரைந்து இலக்கை அடைவதே Goblin Tools நமக்கு அளிக்​கும் முக்​கிய நன்​மை.

யாருக்கு இது மிக​வும் பயன்​படும்? - ஆசிரியர்​கள், சிறப்​புக் கல்​வி​யாளர்​கள் (Special Educators), சிகிச்​சை​யாளர்​கள் (Therapists), மனநல ஆலோ​சகர்​கள், மாணவர்​கள், ஒரே நேரத்​தில் பல பொறுப்​பு​களைக் கையாளும் எவருக்​கும் இந்​தக் கருவி சிறந்​ததொரு எண்​ணிலக்க (Digital) உதவி​யாள​ராக இருக்​கும். https://goblin.tools/

| மேலும் கற்கலாம்... |

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்

SCROLL FOR NEXT