தொழில்நுட்பம்

Lava Yuva Star 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய சந்தையில் லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா யுவா சீரிஸ் போனின் வரிசையில் ‘லாவா யுவா ஸ்டார் 3’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

          

கடந்த ஆண்டு லாவா யுவா ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. தற்போது அதன் அடுத்த எடிஷன் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.75 ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன்

  • Unisoc SC9863A சிப்செட்

  • 4ஜிபி ரேம்

  • 64 ஜிபி ஸ்டோரேஜ்

  • பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 5,000mAh பேட்டரி

  • 10 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு சப்போர்ட்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • 4ஜி நெட்வொர்க்

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இந்த போனின் விலை ரூ.7,499 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT