தொழில்நுட்பம்

Lava Virat V1 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா விராட் வி1 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய சந்தையில் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் சந்தைக்கு வந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளியாகி உள்ளது. வரும் 31-ம் தேதி முதல் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதோடு லாவா விராட் வி1 மாடல் போனும் வெளிவந்துள்ளது.

லாவா விராட் வி1 5ஜி: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

>> Unisoc T8200 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 4ஜிபி ரேம்

>> 64ஜிபி ஸ்டோரேஜ்

>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்புறம் உள்ள கேமரா

>> 6,000mAh பேட்டரி

>> கோல்டு மற்றும் நீல நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> 18 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.12,999

SCROLL FOR NEXT