தொழில்நுட்பம்

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Lava Bold N2 Lite ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்தியாவில் லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

          

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் லாவா போல்ட் என்2 சீரிஸில் ஒன்றாக வெளிவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் லாவா போல்ட் என்2 போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் போன் வாங்க விரும்பும் பயனர்களை டார்கெட் செய்து லாவா போல்ட் என்2 லைட் போன் அறிமுகமாகி உள்ளது.

லாவா போல்ட் என்2 லைட் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

  • Unisoc SC9863A சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன்

  • 3ஜிபி ரேம்

  • 64ஜிபி ஸ்டோரேஜ்

  • 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • ஏஐ லென்ஸ் + 13 மெகா பிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • 5,000mAh பேட்டரி

  • 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • 4ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.7,399

SCROLL FOR NEXT