தொழில்நுட்பம்

Lava Aura Curve ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா Aura கர்வ் 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய சந்தையில் லாவா Aura கர்வ் போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனில் லாவா வாயு ஏஐ, இரண்டு ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

லாவா Aura கர்வ் 5ஜி போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> மீடியாடெக் டிரான்சிட்டி 7100 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 6ஜிபி ரேம்

>> 128ஜிபி ஸ்டோராஜ்

>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

>> 6,000mAh பேட்டரி

>> 45 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.23,999 முதல் தொடங்குகிறது

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT