சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z11xa போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z11xa ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் iQOO Z11x மற்றும் ஆகஸ்ட் மாதம் iQOO Z11 போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருந்தது. இந்த போனின் பேட்டரி திறன் மூலம் 40 மணி நேர வீடியோ பிளேபேக், 15.4 மணி நேர கேமிங் மற்றும் 10.7 மணி நேர தொடர் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும் என்று iQOO நிறுவனம் தெரிவித்துள்ளது. 91 நிமிடங்களில் இந்த போனை நூறு சதவீதம் சார்ஜ் செய்து விடலாம் என்றும் iQOO தெரிவித்துள்ளது. பயனரின் ஸ்க்ரீன் அனுபவத்துக்காக ஸ்லீப் கம்ஃபோர்ட் மோட் மற்றும் ஆன்டி-மோஷன் சிக்கனஸ் மோட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளது.
iQOO Z11xa சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.76 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> மீடியாடெக் டிமான்சிட்டி 7400 டர்போ சிப்செட்
>> 8ஜிபி ரேம்
>> 128ஜிபி ஸ்டோரேஜ்
>> 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
>> 50 + 2 மெகாபிக்சல் என பின்பக்கம் இரண்டு கேமரா உள்ளது
>> 7,200mAh பேட்டரி
>> 44 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> இதன் விலை ரூ.28,999