தொழில்நுட்பம்

உலகை உலுக்​கும் அமெரிக்​க ராக்ஸ்டார் நிறு​வனத்தின் ஜிடிஏ 6 வீடியோ கேம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் கடந்த 1997-ம் ஆண்​டில் ஜிடிஏ 1 என்ற பெயரில் அதிரடி, சாகச வீடியோ கேமை வெளி​யிட்​டது. ஜிடிஏ என்​பது கிராண்ட் தெப்ட் ஆட்டோ (பெரிய அளவி​லான கார் திருட்​டு) என்​ப​தன் சுருக்கம் ஆகும்.

கடந்த 1999, 2001, 2008, 2013-ம் ஆண்​டு​களில் ஜிடிஏ வீடியோ கேம் சீரிஸ்​கள் வெளி​யாகின. சுமார் 13 ஆண்​டு​களுக்​குப் பிறகு உலகம் முழு​வதும் நேற்று ஜிடிஏ 6 வீடியோ கேம் வெளி​யிடப்​பட்​டது. இது சுமார் ரூ.8,400 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. உலகம் முழு​வதும் சுமார் 1.7 கோடி பேர் முன்​ப​திவு செய்து வீடியோ கேமை வாங்கி உள்​ளனர். இதன்​மூலம் முன்​ப​தி​வாக மட்​டும் ரூ.13,800 கோடி வசூல் செய்​யப்​பட்டு உள்​ளது. முதல் வாரத்​திலேயே ரூ.43,000 கோடி வரை வசூலை வாரி குவிக்​கும் என்று எதிர்பார்க்கப்​படு​கிறது.

வழக்​க​மான வீடியோ கேம்​களில் ஒரு குறிப்​பிட்ட பாதை​யில் மட்டும் ஓட வேண்​டும் அல்​லது எதிரி​களை சுட வேண்​டும். ஆனால் ஜிடிஏ வீடியோ கேமில் எந்த கட்​டுப்​பாடும் கிடை​யாது. இந்த கேமில் கற்​பனை​யான லியோனிடா மாகாணத்​தின் வைஸ் சிட்​டி​யில் நடக்​கும் கதை​யில் ஜேசன் டுவால், லூசியா ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களாக வரு​கின்​றனர். இரு​வரும் காதலர்களாக​வும், குற்​றச் செயல்​களில் ஈடு​படும் கூட்டாளிகளாவும் காட்​டப்​படு​கின்​றனர்.

இந்த கேமில் பங்​கேற்​போர், ஹீரோ​வாக மாறி கதையை நமக்​குப் பிடித்​த​வாறு நகர்த்​தலாம். கற்​பனை நகரத்​தில் கார் ஓட்​டு​வது, ஹெலி​காப்​டரில் பறப்​பது, ஆக்​ரோஷ​மாக சண்​டை​யிடு​வது என முழு​மை​யான சுதந்​திரத்தை தரு​வ​தால் இந்த விளை​யாட்டு உலகம் முழு​வதும் மிக​வும் பிரபல​மாக உள்​ளது. இந்​தி​யா​வில் ஜிடிஏ 6 வீடியோ கேமின் ஸ்டாண்​டர்ட் எடிசனை பதி​விறக்​கம் செய்ய ரூ.5,999, அல்​டிமேட் எடிசனை பதி​விறக்​கம் செய்ய ரூ.7,499 கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

சாதனைகளை பட்டியலிட்ட மோடி

கடந்த 2013-ம் ஆண்டு செப்​டம்​பரில் ஜிடிஏ 5 சீரிஸ் வெளி​யானது. அதற்கு அடுத்த ஆண்​டான 2014 மே 26-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் மத்​தி​யில் பாஜக அரசு பதவி​யேற்​றது. தற்​போது ஜிடிஏ 6 சீரிஸ் வெளி​யிடப்​பட்டு உள்​ளது. இதையொட்டி இளம் தலை​முறை​யினரை கவரும் வகை​யில் ஜிடிஏ சீரிஸ் பாணியில் பாஜக அரசின் சாதனை​களை பிரதமர் நரேந்​திர மோடி பட்​டியலிட்டு உள்​ளார்.

இதுதொடர்​பாக சமூக வலை​தளத்​தில் அவர் நேற்று விளக்​கக் குறிப்​பு​களு​டன் கார்ட்​டூன் புகைப்​படங்​களை வெளி​யிட்​டார். 100% வீடு​களில் கழிப்​பறை வசதி, 175 ஜிகா​வாட் மின் உற்பத்தி, 440 விண்வெளி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், ரயில்வே துறையில் 99.6% மின்மயம், 5ஜி சேவை​யில் ரூ.7.51-க்கு டேட்டா, நக்​சல் பா​திப்பு இல்​லாத இந்​தியா உள்ளிட்ட சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி பட்டியலில் வெளியிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT