தொழில்நுட்பம்

‘iPhone Duo’ - ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் போன் சந்தையில் அறிமுகம்

வேட்டையன்

குபெர்டினோ: அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் ஃபோல்டபிள் போனான ‘iPhone Duo’-வை இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

மடிக்கக்கூடிய தன்மை கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்காலத்தில் மிக வலுவான சந்தை சர்வதேச நாடுகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை கருத்தில் கொண்டு முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கம் உள்ளது. இந்நிலையில், முதல் முறையாக ஃபோல்டபிள் போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

iPhone Duo சிறப்பு அம்சங்கள் என்ன?

>> ஐஓஎஸ் 27 இயங்குதளம்

>> 5.4 இன்ச் கவர் டிஸ்பிளேவை (வெளிப்புறம்) கொண்டுள்ளது இந்த போன்

>> 7.6 இன்ச் மெயின் டிஸ்பிளேவை (உட்புறம்) கொண்டுள்ளது இந்த போன்

>> ஏ20 புரோ சிப்

>> இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> பின்புறம் இரண்டு கேமரா உள்ளது. இரண்டுமே 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது.

>> 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 31 மணி நேர வீடியோ பிளே பேக் டைமை கொண்டுள்ளது உட்புற டிஸ்பிளே

>> 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி, 2 டிபி என நான்கு ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இதன் விலை ரூ.2,99,900 முதல் தொடங்குகிறது.

>> வரும் அக்டோபர் மாதம் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு வருகிறது

SCROLL FOR NEXT