

குபெர்டினோ: அமெரிக்க நாட்டில் இந்திய நேரப்படி புதன்கிழமை (செப்.9) இரவு 10.30-க்கு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ‘சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்’ நிகழ்வில் ‘ஐபோன் 18 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ ஜான் டெர்னஸ் அறிமுகம் செய்து வைத்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள இந்த ஐபோன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 18 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இந்த புது வகை ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் போன்களில் ஆப்பிள் நிறுவனமும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 புரோ மற்றும் ஐபோன் 18 புரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகமாகி உள்ளது. இருப்பினும் இம்முறை ஐபோன் 18 மற்றும் ஐபோன் ஏர் 2 மாடல்களை ஆப்பிள் அறிவிக்கவில்லை.
ஐபோன் 18 புரோ மற்றும் ஐபோன் 18 புரோ மேக்ஸ் மாடல் போன்களின் அம்சங்கள்
>> நான்கு வண்ணங்களில் இந்த போன்கள் வந்துள்ளது. கருப்பு, சில்வர், கிளேசியர் மற்றும் Burgundy ஷேடுகளில் கிடைக்கிறது.
>> 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி, 2 டிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் இந்த போன்கள் கிடைக்கிறது.
>> ஐபோன் 18 புரோ 6.3 இன்ச் OLED டிஸ்பிளே கொண்டுள்ளது.
>> ஐபோன் 18 புரோ மேக்ஸ் 6.9 இன்ச் OLED டிஸ்பிளே கொண்டுள்ளது.
>> ஏ20 புரோ சிப்
>> iOS 27 இயங்குதளம்
>> யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
>> பின்பக்கத்தில் மூன்று கேமரா உள்ளது. மூன்றும் 48 மெகாபிக்சல் உடன் வெளிவந்துள்ளது.
>> 18 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> 5ஜி நெட்வொர்க்
>> இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். அதில் ஒன்று இ-சிம். இரண்டு சிம் கார்டுகளையும் இ-சிம்களாக பயன்படுத்தும் வசதி சில நாடுகளில் இருக்கும் என தகவல்.
>> இந்த போன்களுக்கான முன்பதிவு வரும் 12-ம் தொடங்குகிறது. 18-ம் தேதி முதல் இந்த போன்களை பெறலாம்.
>> ஐபோன் 18 புரோ ரூ.1,64,900 முதல் விற்பனை ஆகிறது.
>> ஐபோன் 18 புரோ மேக்ஸ் ரூ.1,79,900 முதல் விற்பனை ஆகிறது.