தமிழகம்

கடும் நடவடிக்கை தினம் கடைபிடிப்பு: சென்னையில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் சாலைப் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், போக்​கு​வரத்து விதி​மீறல்​களுக்கு எதிராக நேற்று ‘விதி​மீறல்​களற்ற நாள் (நோ டாலரன்ஸ் டே)’ கடைப்​பி​டிக்​கப்​பட்​டது. இதை​யொட்டி, மாநகரின் 80-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் போக்​கு​வரத்து போலீ​ஸார் சிறப்​புத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர்.

சென்​னை​யில் சாலை விபத்​துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளிடையே போக்​கு​வரத்து விதி​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில் இந்​தச் சிறப்​புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்​டது. இதற்​காக, மாநகரின் அனைத்து முக்​கியச் சாலைகள் மற்​றும் பிரதான சாலைகளில் நேற்று காலை முதல் போக்​கு​வரத்து போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

போக்​கு​வரத்​துக் காவல் ஆய்​வாளர்​கள் தலை​மையில் நடை​பெற்ற இந்​தச் சோதனை​யின்​போது, ஹெல்​மெட் அணி​யாமல் இருசக்​கர வாக​னங்​களில் சென்​றவர்​களைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்​தனர். ஓட்​டுநர் உரிமம் இல்​லாமல் வாக​னம் ஓட்​டிய​வர்​கள் மற்​றும் உரிய வாகன ஆவணங்​கள் இல்​லாதவர்களும் சோதனையில் சிக்​கினர்.

ஆவணங்​கள் இல்​லாத சில வாக​னங்​களைப் போலீஸார் பறி​முதல் செய்​தனர். நான்கு சக்​கர வாக​னங்​களில் பயணித்தவர்​களிடம் சீட் பெல்ட் அணிவதன் அவ​சி​யம் குறித்​தும் விழிப்புணர்வு ஏற்​படுத்​தினர். சீட் பெல்ட் அணி​யாமல் வாக​னம் ஓட்டியவர்​களுக்கு அபராதமும் விதிக்​கப்​பட்​டது.

காவலர்​களுக்கும் அபராதம்: இந்​தச் சிறப்​புத் தணிக்​கை​யின்​போது, ஹெல்​மெட் அணி​யாமல் இருசக்​கர வாக​னங்​களில் சென்ற சில காவலர்​களும் போக்​கு​வரத்​துப் போலீ​ஸாரின் சோதனை​யில் சிக்​கினர். அவர்​களுக்​கும் விதி​முறைப்​படி அபராதம் விதிக்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT