தமிழகம்

பள்ளிக்கரணை | இளைஞரை மிரட்டி ஆட்டோவில் கடத்தி பணம், செல்போன் பறிப்பு

செய்திப்பிரிவு

பள்​ளிக்​கரணை: திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த அஜய் (21), சென்னை துரைப்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் விடு​தி​யில் தங்​கி​யிருந்​து, அங்​குள்ள தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​கிறார்.

சொந்த ஊருக்​குச் சென்​று​விட்​டு, கடந்த 13-ம் தேதி இரவு சென்​னைக்​குத் திரும்​பி​யுள்​ளார். பள்ளிக்கரணை ரேடியல் சாலை​யில் பைக்கில் சென்​ற​போது, ஆட்​டோ​வில் வந்த 3 பேர் அவரை வழிமறித்​துக்கத்​தி​யைக் காட்டி மிரட்டி பணம் கேட்​டுள்​ளனர்.

அஜய் ரொக்​கப் பணம் இல்லை எனக் கூறிய​தால், அவரைத் தாக்கி ஆட்​டோ​வில் கடத்​திச் சென்​றனர். பின்​னர் அவரது வங்​கிக் கணக்​கில் உள்ள பணத்தை எடுத்​துக் கொடுக்​கு​மாறு அந்​தக் கும்​பல் மிரட்​டி​யுள்​ளது.

அஜய்​யின் வங்​கிக் கணக்​கில் போதிய பணம் இல்​லாத​தால், கடன் வழங்​கும் செயலி மூலம் கடன் பெறச் செய்​த​தாகக் கூறப்​படுகிறது. பின்​னர் அந்​தத் தொகையி​லிருந்து ரூ.9,500-ஐ மற்​றொரு​வரின் வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பி, ஏடிஎம் அட்டை மூலம் பணத்தை எடுத்​துள்​ளனர்.

பின்​னர் அஜய்​யின் செல்​போனை​யும் பறித்​துக்​கொண்ட கும்​பல், அவரை மீண்​டும் ஆட்​டோ​வில் அழைத்​து​வந்து பள்​ளிக்​கரணை ரேடியல் சாலை​யில் இறக்​கி​விட்​டுள்​ளது. அவரது பைக்​கை​யும் ஒப்​படைத்​து​விட்டு தப்​பிச் சென்​றுள்​ளது.

புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். சம்​பவம் நடை​பெற்ற பகு​தி​களில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்​து, குற்​ற​வாளி​களை அடை​யாளம் காணும் முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

பணம் அனுப்​பப்​பட்ட வங்​கிக் கணக்​கு, ஏடிஎம் மையங்​களில் பணம் எடுக்​கப்​பட்ட விவரங்​கள் குறித்​தும் வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது. ரேடியல் சாலை​யில் இரவு நேரக் காவல் ரோந்​துப் பணி​களைத் தீவிரப்​படுத்த பொது​மக்​கள்​ கோரிக்கை விடுத்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT