கோப்புப் படம்

 
தமிழகம்

கோத்தகிரி அருகே யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோத்தகிரி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன்(35). இவர் நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் தொரை இந்திரா நகரில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று திடீரென அவரை தாக்கியது.

பலத்த காயமடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு நேரத்தில் சம்பவம் நடந்ததால் நேற்று காலை அந்த வழியாக விவசாயத் தோட்டத்திற்கு சென்றவர்கள், பிரவீனின் உடலைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கட்டபெட்டு வனத்துறையினர் மற்றும் கோத்தகிரி காவல்துறையினர் சென்று பிரவீனின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT