திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா முகப்பில் உள்ள கல்வெட்டில் 1805 எனக் குறிப்பிட்டுள்ளதாக இணையத்தில் வைரலாகி வரும் படம்.

 
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை தர்கா முகப்பு கல்வெட்டில் பொறிக்கப்பட்ட ‘1805’ வருடம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் படம்

செய்திப்பிரிவு

மதுரை: திருப்​பரங்​குன்​றம் முரு​கன் கோயில் மலை மீதுள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வது தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் விசாரணை நடந்து வரு​கிறது.

இதில் சிக்​கந்​தர் பாதுஷா தர்கா நிர்​வாகம் தரப்​பில், மலை உச்​சி​யில் உள்ள தூண் அமைந்​துள்ள பகுதி தர்கா​வுக்கு சொந்​த​மானது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசு மற்​றும் இந்து சமய அறநிலை​யத்​துறை சார்​பில், அத்​தூண் நில அளவைக் கல் எனவும், சமணர்​களின் தூண் எனவும் தெரிவிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதற்​கிடை​யில், திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள சிக்​கந்​தர் பாதுஷா தர்கா முகப்​பில் உள்ள கல்​வெட்​டில் 1805 என்று பொறிக்​கப்​பட்ட கல்​வெட்டு புகைப்​படம் இணை​யத்​தில் பரவி வரு​கிறது.

தீபத்​தூண் தர்கா​வுக்கு சொந்​தம் என உயர் நீதி​மன்​றத்​தில் வாதிட்ட நிலை​யில், முகப்பு கல்​வெட்​டில் 1805 என்​றுள்ள புகைப்பட ஆதா​ரம் இணை​யத்​தில் வைரலாகி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

இதுகுறித்து மத்​திய தொல்​லியல் துறை​யின் திருச்சி மண்டல கண்​காணிப்பு அலு​வல​கத்​தில் கேட்​ட​போது, “இணை​யத்​தில் சிக்​கந்​தர் பாதுஷா தர்கா முகப்பு கல்​வெட்​டில் 1805 என்ற ஆண்டு குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் தர்​கா​வின் முகப்பு கட்​டிடமே 1805-ல் ​தான் உருவான​தாக கருத வாய்ப்​புள்​ளது.

ஆனால், தீபத்​தூண் பலநூறு ஆண்​டு​களுக்கு முந்​தைய சமணர்​கால தூண் என்று தெரிவிக்​கப்​படும் நிலை​யில், தூண் தங்​களுக்கு சொந்​த​மானது என தர்கா நிர்​வாகம் எப்​படி கூறுகிறது என்ற கேள்வி எழுகிறது. அந்த புகைப்​படம் உண்மை​தானா எனவும், அதில் உள்ள தகவல்​கள் உண்​மையா என்​பது குறித்​தும் ஆய்வு செய்து வரு​கிறோம்" என்​றனர்.

SCROLL FOR NEXT