மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 டிசம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 டிசம்பர் 2025
Updated on
1 min read

மேஷம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் அநாவசியமாகக் கோபத்தைக் காட்ட வேண்டாம். அக்கம்பக்கத்தினரால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேலைப்பளு குறையும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

சிம்மம்: எதையும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மனதில் அமைதி ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

துலாம்: சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீட்டில் உற்சாகம் கரைபுரளும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உறவினர்கள் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் அகலக் கால் வைக்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வயிற்றுவலி, கழுத்துவலி விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடநலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்: மனக்குழப்பங்கள் விலகும். வேலை தேடி காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 டிசம்பர் 2025
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.18 - 24

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in