தமிழகம்

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் நிறைவு: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில், வண்​டலூரை அடுத்த கிளாம்​பாக்​கத்​தில் புதிய பேருந்து நிலை​யம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்​பரில் திறக்​கப்​பட்​டது. இப்​பேருந்து நிலை​யத்​தின் அரு​கில், தாம்​பரம் - செங்​கல்​பட்டு ரயில் பாதை இருக்​கிறது.

இருப்​பினும், ரயில் நிலை​யம் இல்​லை. இதனால் இங்கு மின்​சார, விரைவு ரயில்​களை நிறுத்த முடி​யாத நிலை இருக்​கிறது. இங்கு ரயில் நிலை​யம் அமைக்க பயணி​கள் தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

          

இதையடுத்​து, ரூ.20 கோடி மதிப்​பீட்​டில் வண்​டலூர் - ஊரப்​பாக்​கம் இடையே கிளாம்​பாக்​கத்​தில் புதிய ரயில் நிலை​யம் அமைக்​கப்​படு​வதற்கு தெற்கு ரயில்​வே சென்னை ரயில்வே கோட்​டம் கடந்த 2024-ம் ஆண்டு அக்​டோபரில் ஒப்​பந்​தப்​புள்ளி கோரியது. இதையடுத்​து, ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டு, ரயில் நிலை​ய கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கி, அனைத்து பணி​களும் நிறைவடைந்​து​விட்​டன.

3 கட்டங்களாக பணி: அதே நேரத்​தில், புதிய ரயில் நிலை​யத்​தை​யும் ஜிஎஸ்டி சாலை​ யின் மறு​புறம் அமைந்​துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலை​யத்​தை​யும் இணைக்​கும் வகை​யில், பிரம்​மாண்ட ஆகாய நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி நடை​பெறுகிறது. சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் சார்​பில், 3 கட்​டங்​களாக இந்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இந்த நடைப்​பாலத்​தில் பயணி​களின் வசதிக்​காக, இரு​புற​மும் மின்​தூக்​கி​கள் அமைக்​கப்பட உள்​ளன. ஒட்​டுமொத்​தப் பணி​களும் இந்த மாதத்​துக்​குள் முடிக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “கிளாம்பாககம் ரயில் நிலைய பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. அதாவது ரயில்வே தரப்​பில் அனைத்து பணி​களும் நிறைவடைந்​து​விட்​டன. மாநில அரசு சார்​பில் மேற்​கொள்​ளப்​படும் பணி நடை​பெறுகிறது. இந்​நிலை​யம் விரை​வில் திறக்​கப்​படும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT