சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிக்கூடம் முதல் பள்ளிவாசல் வரை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாத அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில், திமுகவினரிடம் இருந்தே பெண்களைகாக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபிமுதல் ஒன்றியச் செயலாளர்வரை இந்த திமுக பாலியல் சார்களைக் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவராக தான் இந்தமுதல்வர் இருக்கிறார். தன் கட்சிகாமுகர்களை ஒடுக்க முடியாதஇந்த முதல்வர், தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார். திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில் அஸ்ரத் ஆக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ் என்பவர் தர்காவுக்கு வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமைசெய்ய முயன்று, கத்தியால் குத்தியதாக வெளிவந்த தகவல்கடும் அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது என்றால் திமுக அரசையும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஒழுங்கையும் குற்றவாளிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.
அப்துல் அஜீஸ் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில், அவர் தர்கா தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார்.குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.