முத்துக்குமரன்
சென்னை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் முத்துக்குமரன் மீது பாலியல் குற்றம்சாட்டி, பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அக்.4-ம் தேதி முத்துக்குமரனை சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னை வற்புறுத்தி காரில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக முத்துக்குமரன் கூறியதாக வெளியான தகவலில், ‘நானும் சம்பந்தப்பட்ட பெண்ணும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி பேசினார் என்று எனக்கு புரியவில்லை. அவர் கொஞ்சம் மன அழுத்தத்தில் உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை போலீசில் புகார் அளிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.