தமிழகம்

கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற பெண் கைக்குழந்தையுடன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பெண் ஒரு​வர் கைக்​குழந்​தை​யுடன் தனி​யார் பேருந்​தில் கஞ்சா கடத்தி வரு​வ​தாக சென்னை சி.எம்​.பி.டி. காவல் நிலைய போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்து போலீ​ஸார் நேற்று முன்​தினம் மாலை கோயம்​பேடு பேருந்து நிலை​யம் மற்​றும் சுற்​று​ வட்​டார பகு​தி​களில் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

அப்​போது கோயம்​பேடு ஆர்ச் அருகே தனி​யார் பேருந்​தில் இருந்து கைக்​குழந்​தை​யுடன் இறங்​கிய பெண் சந்​தேகத்​துக்​கிட​மாக நடந்து கொண்​டார்.

அவரைப் பிடித்து போலீ​ஸார் சோதனை செய்​த​போது, உடைமை​களில் மறைத்து வைத்​திருந்த 6 கிலோ கஞ்சா கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இதையடுத்து அந்த பெண்ணை போலீ​ஸார் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று நடத்​திய விசா​ரணை​யில் அவர் ஹரி​யானா மாநிலத்​தைச் சேர்ந்த கங்​காதேவி (38) என்​பது தெரிய​வந்​தது.

அவர், டெல்​லி​யில் பிரீத்தி என்​பவரது வீட்​டில் வேலை செய்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. பிரீத்தி கொடுத்த செல்​போன் எண்ணை தொடர்பு கொண்​டு, ஒடிசா சென்று கஞ்​சாவை வாங்கி வரு​மாறு கங்​கா தே​வி​யிடம் அவர் கூறிய​தாக போலீஸ் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

அதன்​படி ஒடிசா சென்று கஞ்​சாவை வாங்​கிய கங்​காதே​வி, பின்​னர் சென்​னையை அடுத்த செங்​குன்​றம் பேருந்து நிலை​யத்​துக்கு வந்து அங்​கிருந்து தனி​யார் பேருந்​தில் கோயம்​பேடு வந்​துள்​ளார்.

கோயம்​பேட்​டில் இருந்து கஞ்​சாவை கேரளா​வுக்கு கடத்​திச் செல்ல முயன்​ற​போது போலீ​ஸாரிடம் சிக்கி உள்​ளார். இதையடுத்​து, கங்​காதே​வியை கைது செய்த போலீஸார் கஞ்​சாவை கொடுத்​தவர்​கள், கடத்​தல் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் குறித்து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT