கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படுமா?

அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், திட்​ட​மிட்​டபடி டிஎன்​பிஎஸ்சி தேர்​வு​கள் நடத்​தப்​படுமா என்ற எதிர்​பார்ப்பு அரசுப் பணி​யில் சேர விரும்​பும் இளைஞர்​களிடையே எழுந்​துள்​ளது.

தமிழகத்​தில் அரசின் பல்​வேறு துறை​கள் மற்​றும் அரசு பொதுத்​துறை நிறு​வனங்​களுக்​குத் தேவை​யான பணி​யாளர்​களும் அலு​வலர்​களும் டிஎன்​பிஎஸ்சி எனப்​படும் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் வாயி​லாக தேர்வு செய்​யப்​படு​கிறார்​கள். அரசுப் பணி​யில் சேர விரும்​பும் இளைஞர்​கள் போட்​டித் தேர்​வு​களுக்கு முன்​கூட்​டியே தயா​ராக வசதி​யாக ஆண்​டு​தோறும் வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணையை டிஎன்​பிஎஸ்சி வெளி​யிட்டு வரு​கிறது.

அந்த வகை​யில் கடந்த திமுக ஆட்​சி​யில் 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை கடந்த 2025-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. அதில் குரூப்​-1, குரூப்​-2, குரூப்-4 தேர்​வு​கள் உட்பட மொத்​தம் 6 போட்​டித் தேர்​வு​களுக்​கான அறி​விப்​பு​கள் இடம்​பெற்​றுள்​ளன. ஒவ்​வொரு தேர்​வுக்​கான அறி​விப்​பும் எப்​போது வெளி​யிடப்​படும், தேர்​வு​கள் நடை​பெறும் நாள் ஆகிய விவரங்​களும் அதில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, முதலா​வது தேர்​வாக ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப்​பணி​கள் தேர்வு (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) உள்​ளது. இத்​தேர்​வுக்​கான அறி​விப்பு மே மாதம் 20-ம் தேதி வெளி​யிடப்​பட்டு தேர்வு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்​கள் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சூழலில் தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக ஆட்சி பொறுப்​பேற்​றுள்​ளது. இதனால், வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி டிஎன்​பிஎஸ்சி தேர்​வு​கள் நடத்​தப்​படுமா என்ற எதிர்​பார்ப்பு அரசுப் பணி​யில் சேர விரும்​பும் இளைஞர்​களிடையே எழுந்​துள்​ளது.

ஒரு​வேளை தேர்வு முறை​யில் மாற்​றம், புதிய பாடத்​திட்​டம் போன்ற நடை​முறை​கள் காரண​மாக டிஎன்​பிஎஸ்சி தேர்​வு​கள் தள்​ளிப்​போகுமோ என்​றும் அவர்​கள் அச்​சப்​படு​கிறார்​கள். அரசுத் துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​கள் முன்​னுரிமை அடிப்​படை​யில் நிரப்​பப்​படும் என தவெக தேர்​தல் வாக்​குறுதி அளித்​திருக்​கிறது. எனவே அரசுப் பணி நியமனம் தொடர்​பாக புதிய அரசு எந்த மாதிரி​யான முடிவை எடுக்​கப்​போகிறது என்று டிஎன்​பிஎஸ்சி தேர்​வர்​கள் மிகுந்த ஆவலுடன் எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

SCROLL FOR NEXT