தமிழகம்

தாம்பரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா திமுக? - தட்டிப் பறிக்க தயாராகும் அதிமுக

பெ.ஜேம்ஸ்குமார்

தாம்பரம்: ​செங்​கல்​பட்​டு, சோழிங்​கநல்​லூர், தாம்​பரம் ஆகிய தொகு​தி​களில் அதி​முக​வும், திமுக​வும் நேரடி​யாக மோதுகின்​றன.

இந்த 3 தொகு​தி​களி​லும் கடந்த இரண்டு தேர்​தல்​களில் திமுக தொடர்ச்​சி​யாக வெற்றி பெற்​றுள்​ளது. இந்த தேர்​தலில் செங்​கல்​பட்​டு, தாம்​பரம் தொகு​தி​களில் திமுக சார்​பில் புதி​ய​வர்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

சோழிங்​கநல்​லூர் தொகு​தி​யில் தற்​போதைய எம்​எல்ஏ அரவிந்த் ரமேஷ் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். கடந்த 2 தேர்​தலிலும் தோல்வி அடைந்த, அதி​முக​வின் கே.பி.கந்​தன், 3-வது முறை​யாக மீண்​டும் களமிறக்​கப்​பட்​டுள்​ளார்.

          

தாம்​பரம் தொகு​தி​யில் 3 முறை எம்​எல்​ஏ​வாக இருந்த எஸ்​.ஆர்​.​ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டு, மருத்​து​வர் கிருத்​திகா தேவி என்​பவருக்கு இம்​முறை சீட் வழங்​கப்​பட்​டுள்​ளது. இவரை எதிர்த்து அதி​முக சார்​பில் சிட்​ல​பாக்​கம் ராஜேந்​திரன் போட்​டி​யிடு​கிறார்.

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் திமுக சார்​பில், தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற வரலட்​சுமிக்கு பதிலாக, நந்​திவரம் கூடு​வாஞ்​சேரி நகராட்சி தலை​வ​ராக இருந்த கார்த்​திக் என்​பவருக்கு சீட் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதி​முக தரப்​பில் கஜேந்​திரன் போட்​டி​யிடு​கிறார்.

இந்த 3 தொகு​தி​களை​யும் தக்​கவைக்க வேண்​டும் என்ற முனைப்​பில் திமுக தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கிறது. கூட்​டணி கட்​சிகள் பலத்​துடன் திமுக​விடம் இருந்து தொகு​தி​களை கைப்​பற்ற வேண்​டும் என்ற கணக்​கில் அதி​முக​வும் களம் இறங்​கி​யுள்​ளது.

பாஜக , பாமக உடன் இருப்​பது அதி​முகவுக்கு பலம். திமுக வாக்​கு​களை நடிகர் விஜய் கட்சி வேட்​பாளர் கணிச​மாக பிரித்து விடு​வார் என்று அதி​முக கணக்கு போடு​கிறது.

உட்​கட்சிப் பூசல் இருந்​தா​லும், 3 தொகுதி​களி​லும் முஸ்​லிம்​கள் வாக்கு கணிச​மாக உள்​ளதும், விசிக உள்​ளிட்ட கூட்​டணி கட்​சிகளின் வாக்​கு​களும் தங்​களுக்கு சாதகமாக இருக்​கும் என திமுக கருதுகிறது. புதிய வரவான நடிகர் விஜய் கட்​சி​யின் தாக்​கம் மற்ற கட்​சிகளுக்கு பா​திப்​பை ஏற்​படுத்​தும்​ என அரசி​யல்​ நோக்​கர்​கள்​ கருதுகின்​றனர்​.

SCROLL FOR NEXT