அண்ணாமலை

 
தமிழகம்

“அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம்” - அண்ணாமலை அறிவிப்பு

செய்திப்பிரிவு

பழநி: உள்​ளாட்​சித் தேர்​தலில் போட்​டி​யிடுவோம். படிப்​படி​யாக அனைத்​துத் தேர்​தல்​களி​லும் போட்​டி​யிடுவோம் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் நிறு​வனர் அண்​ணா​மலை கூறினார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி சண்​முக நதி​யில் பொது​மக்​களின் பங்​களிப்​புடனும், தன்​னார்​வலர்​களின் ஒத்​துழைப்​புடனும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பினர் தூய்​மைப் பணியை மேற்​கொண்​டனர். கடந்த சில வாரங்​களாக நடந்​து​வந்த இப்​பணி முடிவடைந்​ததை அடுத்து, தூய்​மைப்​படுத்​தப்​பட்ட சண்​முக நதியை மக்​களுக்கு அர்ப்​பணிக்​கும் விழா நேற்று மாலை நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில், அமைப்​பின் நிறு​வனர் அண்​ணா​மலை பேசிய​தாவது: சண்​முக நதி​யைச் சுத்​தம் செய்ய வேண்​டும் என்ற பெரிய நோக்​கத்​தோடு கடந்த 8 வாரங்​களாக தன்​னார்​வலர்​கள், மாணவ, மாணவி​கள், பொது​மக்​கள் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

பழநிக்கு வரு​வோர் சண்​முக நதி​யில் தீர்த்​தம் எடுத்து மலைக்​கோயிலுக்​குச் செல்​வது வழக்​கம். ஆனால், கொஞ்​சம் கொஞ்​ச​மாக இந்த நதி மாசடைந்து ஒரு சாக்​கடையைப்​போல் மாறி மக்​கள் இந்​தப் பக்​கம் வரு​வதைத் தவிர்த்து நேரடி​யாக பழநி மலைக்​கோயிலுக்​குச் செல்​லும் நிலை ஏற்​பட்​டது.

600 டன்​னுக்கு மேல் இருந்த குப்பை அள்​ளப்​பட்டு, புனித நதி​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது. நதிக்​கரையில் முருகப்​பெரு​மானுக்கு உகந்த மர​மான கடம்ப மரங்​கள் நடப்​பட்​டுள்​ளன. பக்​தர்​களுக்​குத் தேவை​யான வசதி​களை அறநிலை​யத் துறை செய்து​கொடுப்​ப​தில்லை. சண்​முக நதி இன்று சுத்​த​மாக இருப்​ப​துபோல் என்​றும் இருக்க அனைவரும் ஒத்​துழைக்க வேண்​டும். இதையெல்​லாம் உள்​ளாட்சி நிர்​வாகம் சரிசெய்ய வேண்​டும். உள்​ளாட்சி என்​பது தன்​னாட்சி அமைப்​பாக இருக்க வேண்​டும்.

உள்​ளாட்​சித் தேர்​தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பினர் போட்​டி​யிடுவார்​கள். கோட்​டை​யில் கேள்வி கேட்​ப​தைவிட உள்​ளாட்​சிகளில் கேள்வி கேட்க வேண்​டும். அந்​தந்​தப் பகுதி​யில் உள்ள நல்​ல​வர்​கள், வல்​ல​வர்​களை உள்​ளாட்​சித் தேர்​தலில் போட்​டி​யிடச் செய்ய வேண்​டும். ஊராட்சி நிர்​வாகம் சரியாகச் செயல்​படும் இடம் கேரளம்.

ஊரின் தலை​வருக்கு முன்​னுரிமை கொடுத்து வேலைசெய்ய வைத்​தால்​தான், அங்கு வேலை சிறப்​பாக நடக்​கும். அடிப்​படை பிரச்​சினைகளைச் சரிசெய்து கொடுப்​பவர்​கள் வேண்​டும். நம்​மிடம் இலக்கு மட்​டுமல்ல, நோக்​கமும் உள்​ளது. தொலைநோக்​குப் பார்​வையும் உள்​ளது. உள்​ளாட்​சித் தேர்​தல் மட்​டுமின்றி படிப்​படி​யாக அனைத்​துத் தேர்​தல்​களி​லும் போட்​டி​யிடுவோம். இவ்​வாறு அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT