தமிழகம்

குழந்தை பெற்றெடுக்க ஆயுள் கைதிக்கு பரோல் கேட்ட மனைவி: வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

பிறக்கும் குழந்தை வாழ்நாள் முழுவதும் களங்கத்தை சுமக்க நேரிடும் என கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: குழந்தை பெற்​றுக்​கொள்​வதற்​காக ஆயுள் தண்​டனை கைதி​யாக இருக்​கும் தன் கணவரை 21 நாட்​கள் சாதாரண பரோலில் விடுவிக்​கக்​கோரி மனைவி தாக்​கல் செய்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பாச்​சேத்தி பகு​தி​யைச் சேர்ந்த ஜலானி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கோரி​யிருப்​ப​தாவது: என் கணவர் முத்​து​மணி, மதுரை மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​டனை கைதி​யாக உள்​ளார். என் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்​கொள்ள விரும்​பு​கிறேன். இதற்​காக கரு​வுறு​தல் சிகிச்சை மேற்​கொள்​வதற்​காக என் கணவருக்கு போலீஸ் பாது​காவலர்​கள் இல்​லாமல் 21 நாட்​கள் சாதாரண பரோல் விடு​முறை வழங்​கக்​கோரி மதுரை சிறைத்​துறை கண்​காணிப்​பாளரிடம் மனு அளித்​தேன். என் மனுவை சிறை கண்​காணிப்​பாளர் நிராகரித்து உத்​தர​விட்​டார். அந்த உத்​தரவை ரத்து செய்​து, எனது கணவருக்கு 21 நாட்​கள் பரோல் விடு​முறை வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் என்​.ஆனந்த் வெங்​கடேஷ், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது.

சிறைத்​துறை கண்​காணிப்​பாளர் தாக்​கல் செய்த மனு​வில், ‘‘மனு​தா​ரர் அவரது கணவருக்கு விடுப்பு கோரப்​பட்ட காரணம் உண்​மை​யானது. அதே நேரத்​தில் மனு​தா​ரரின் கணவரை விடு​வித்​தால் அவரது உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்பட வாய்ப்​புள்​ளது. இதனால் அவருக்கு விடுப்பு வழங்​கக் கூடாது என சிவகங்கை நன்​னடத்தை அலு​வலர் அறிக்கை அளித்​துள்​ளார். கைதிக்கு விடு​முறை வழங்​கி​னால் சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை ஏற்​பட​வும், கைதிக்​கும் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்​கும் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட​வும் வாய்ப்​புள்​ளது. எனவே, விடுப்பு வழங்​கக் கூடாது என திருப்​பாச்​சேத்தி காவல் ஆய்வாளர் கூறி​யுள்​ளார். இவர்​களின் அறிக்கை அடிப்​படை​யில் கைதி​யின் விடுப்பு கோரிக்கை நிராகரிக்​கப்​பட்​டது’’ என அந்த தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: தண்​டனை பெற்​றவர் மூலம் ஒரு குழந்​தையைப் பெற்​றெடுப்​பதற்​கான மனு​தா​ரரின் உரிமையை கருத்​தில் கொள்ள வேண்​டி​யுள்​ளது. இது​போன்ற அசா​தாரண சூழ்​நிலைகளில் நீதி​மன்​றம் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 226-வது பிரி​வின் கீழ் தனது அதி​காரவரம்பை பயன்​படுத்தி தகுந்த உத்​தரவு பிறப்​பிக்​கலாம் என மனு​தா​ரர் தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு தரப்​பில், தமிழ்​நாடு தண்​டனை நிறுத்​திவைப்பு விதி​களின் கீழ் வழங்​கப்​படும் விடுப்பை ஒரு உரிமை​யாகக் கோர முடியாது. அது தண்​டனை பெற்​றவருக்கு வழங்​கப்​பட்ட ஒரு சிறப்புரிமை மட்​டுமே. தண்​டனை நிறுத்​திவைப்பு விதி​களின் கீழ் உள்ள நிபந்​தனை​கள் பூர்த்தி செய்​யப்​ப​டா​விட்​டால் தண்​டனை பெற்​றவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடி​யாது எனக் கூறப்​பட்​டது.

இந்த வழக்​கில் மனு​தா​ரரும் தண்​டனை பெற்​றவரும் குழந்தை பிறப்​புரிமையை வசதியாக புறக்​கணிக்​கின்​றனர். குழந்தை இவ்​வுல​கில் நுழை​யும்​ போது 3 கொலைகள் உள்​ளிட்ட கொடூர​மான குற்​றங்​களைச் செய்து ஆயுள் தண்​டனை அனுபவித்து வரும் ஒரு கைதி​யின் குழந்தை என்ற களங்​கத்​துடன் வளரும். மனு​தா​ரர் கோரிக்​கையை அனு​ம​தித்​தால் குழந்தை தரப்​பில் எந்த தவறும் இல்​லாமல் வாழ்​நாள் முழு​வதும் ஒரு களங்​கத்​தைச் சுமக்​கும்.

இந்த நிலை​யில் குழந்​தையை பெற்று வளர்ப்​ப​தற்கு மனு​தா​ரருக்​கோ, தண்​டனை கைதிக்கோ உரிமை​யில்​லை. இதனால் சாதாரண விடுப்பு வழங்க மறுத்து சிறைத்துறை கண்​காணிப்​பாளர் பிறப்​பித்த உத்​தர​வில் தவறில்லை. அதில், நீதி​மன்​றம் தலையிட வேண்​டிய​தில்​லை. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT