நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு: வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி

திமுக அணியினர் வெளிநடப்பு
நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு: வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
Updated on
2 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்ற பெரும்​பான்​மைக்​கான வாக்​கெடுப்​பில் 144 எம்​எல்​ஏக்​கள் ஆதர​வுடன் முதல்​வர் விஜய்​யின் தவெக அரசு வெற்றி பெற்​றது.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 108 தொகு​தி​களை கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்சியாக தவெக உரு​வெடுத்​துள்​ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்​தம் 118 இடங்​கள் தேவைப்​பட்ட நிலை​யி்ல், காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளைச் சேர்ந்த 13 உறுப்​பினர்​களின் ஆதர​வைத் தவெக பெற்​றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்​லேகர் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து, ஆளுநர் அறி​வுறுத்​தலின்​படி, சட்​டப்​பேர​வை​யில் விஜய்​யின் தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் கேட்​டுக்​கொண்​டபடி. நம்​பிக்கை வாக்​கெடுப்​புக்​கான தீர்​மானத்தை முதல்​வர் விஜய் முன்​மொழிந்​தார்.

தொடர்ந்​து, எஸ்​.​ராஜேஷ் கு​மார் (காங்​கிரஸ்), ஆர்​.செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்), வன்​னியரசு (விசிக), அ.மு.ஷாஜ​கான் (ஐயூஎம்​எல்), அமமுக​வில் இருந்து நீக்​கப்​பட்ட எஸ்​.​காம​ராஜ் (சுயேச்​சை), டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதர​வாக பேசினர்.

பிரேமலதா விஜய​காந்த் (தே​மு​தி​க), தமி​முன் அன்​சாரி (மஜக), நித்​தி​யானந்​தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். போஜ​ராஜன் (பாஜக), சவுமியா அன்​புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்​ப​தாக தெரி​வித்​தனர்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, அதி​முக எம்​எல்​ஏக்​கள் 2 அணி​களாக செயல்​பட்டு வரு​வதை குறிப்​பிட்​டு, அரசுக்கு எதி​ராக வாக்​களிக்க உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, அதி​முக​வின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்​.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்​பட்​டது. அதற்கு பழனி​சாமி உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பேர​வைத் தலை​வர் அனு​மதி அளித்​ததை அடுத்​து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்​ப​தாக தெரி​வித்​தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், ‘பெரும்​பான்மை மக்​கள் தவெக​வுக்கு வாக்​களிக்​க​வில்​லை’ என்று பேசி​யதுடன், வாக்கெடுப்​பில் பங்​கேற்​காமல் வெளிநடப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதல்​வர் விஜய் பேசும்​போது, ‘‘இந்த அரசு நிச்​ச​யம் மதச்​சார்​பற்ற அரசாகத்​தான் செயல்​படும். குதிரை பேரத்​தில் இந்த அரசு ஈடு​பட​வில்​லை. குதிரை வேகத்​தில் செயல்​படு​கிறது. தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு உழைத்த தலை​வர்​கள் வழி​காட்​டிய கொள்​கை​களில் இருந்து இம்​மியள​வும் வில​காமல் இந்த ஆட்சி நடை​பெறும். எனவே, நான் முன்​மொழிந்த தீர்​மானத்தை உறுப்​பினர்​கள் ஏகமன​தாக நிறைவேற்​றித் தரவேண்​டும்’’ என்​றார்.

இதையடுத்​து, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கச்​செய்​து, ஆதரிப்​பவர்​கள், எதிர்ப்​பவர்​கள், நடுநிலை வகிப்​பவர்​கள் என எண்​ணிக் கணிக்​கு​மாறு பேர​வைச் செயலர் கி.சீனி​வாசனுக்குப் பேரவைத் தலைவர் அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​கள் எண்​ணிக் கணிக்​கப்​பட்​டனர். உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கக்​கூறி, பெயர் வாசிக்​கப்​பட்டு அவர்​கள் நிலைப்​பாடு கணக்​கில் கொள்​ளப்​பட்​டது.

இதையடுத்​து, வாக்​கெடுப்பு விவரத்தை பேர​வைத் தலை​வர் அறி​வித்​தார். அதன்​படி, 144 உறுப்​பினர்​கள் அரசுக்கு ஆதர​வளிப்​ப​தாக​வும், 22 உறுப்​பினர்​கள் எதி​ராக வாக்​களித்​த​தாக​வும், 5 உறுப்​பினர்​கள் நடுநிலை வகித்​த​தாக​வும் அறி​வித்​தார். இதன்​மூலம் வாக்​கெடுப்​பில் தவெக அரசு பெரும்​பான்மை பெற்​றுள்​ள​தாக​வும் அறி​வித்​தார்​. இதையடுத்​து, அனைத்​து உறுப்​பினர்​களுக்​கும்​ முதல்​வர்​ விஜய்​ நன்​றி தெரிவித்​தார்​.

நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு: வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
சதம் விளாசிய கோலி: கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது ஆர்சிபி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in