விஜய்

 
தமிழகம்

விஜய் ராஜினாமா செய்வது எந்த தொகுதி? - கு.ப.கிருஷ்ணன், சகாயம் ஐஏஎஸ் பெயர்கள் பரிசீலனை

செய்திப்பிரிவு

திருச்சி: தவெக தலை​வர் விஜய், சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு வெற்றி பெற்​றார். இதையடுத்​து, அவர் எந்​தத் தொகு​தியை ராஜி​னாமா செய்​வார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. அவர் பெரம்​பூர் தொகு​தியை ராஜி​னாமா செய்​து​ விட்​டு, அங்கு தொகு​தியை தனக்​காக விட்​டுக் கொடுத்த மாவட்​டச் செய​லா​ளர் சிவாவை நிறுத்த விஜய் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டது.

இதனிடையே, அவர் திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக தகவல் பரவு​கிறது. இந்த தொகு​தி​யில், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி சகா​யத்தை நிற்​கும்​படி தவெக தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. சகா​யத்தை நிறுத்தி வெற்றி பெற வைத்​து, தமிழகத்தில் கனிம வள கொள்​ளையை தடுக்​க அதற்கன தனி துறையை உரு​வாக்கி அமைச்​ச​ராக்க விஜய் திட்​ட​மிட்டு இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதன்​மூலம் தென் மாவட்ட மக்​களின் ஆதரவை தக்க வைக்க முடி​யும் என்று நம்​புவ​தாக தெரி​கிறது. அப்​படி இல்​லா​விட்​டால், லால்​குடி தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு தோல்​வியடைந்த முன்​னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணன் அல்​லது அவரது மகன் சிரஞ்​சீவி ஆகியோரில் ஒரு​வரை நிறுத்த வாய்ப்பு உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

SCROLL FOR NEXT