திருப்பரங்குன்றம் தீபத்தூண்

 

கோப்புப் படம்

தமிழகம்

திருப்பரங்குன்றம் கல்தூணில் 2 மணி நேரம் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சினை வரப்போகிறது? - மனுதாரர் வாதம்

செய்திப்பிரிவு

நெல்​லித் தோப்பு தர்​கா​வில் தீபம் ஏற்​று​வதை வழக்​க​மாக கொண்​டிருக்​கும்​போது, ஆண்​டுக்கு ஒருநாள் 2 மணி நேரம் மட்​டும் திருப்​பரங்​குன்​றம் கோயில் கல்​தூணில் தீபம் ஏற்​று​வ​தால் யாருக்கு என்ன பிரச்​சினை ஏற்​பட்​டப் போகிறது? என மனுதா​ரர் ராம ரவிக்​குமார் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வாதிடப்​பட்​டது.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள கல்​தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்​றும் தர்கா நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு தாக்​கல் செய்​யப்​பட்​டது, அதேபோல், கார்த்​திகை திருநாளன்று பக்​தர்​கள் அனைவரை​யும் மலை​யில் தீபம் ஏற்ற அனுமதிக்​கக் கோரியும், தொல்​லியல் துறை அனுமதி பெற வேண்​டும் என்ற சரத்​துக்கு எதிராகவும் ராம ரவிக்​குமார் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​திருந்​தார்.

இந்த மனுக்​கள் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல்.எம்.பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரிக்​கப்​பட்டு வரு​கிறது. நேற்று 3-வது நாள் விசா​ரணை​யின்​போது, சிக்​கந்​தர் தர்கா அரு​கில் தீபம் ஏற்​றக் கூடாது என வலியுறுத்தி அரங்​கநாதன் என்​பவர் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் நரேந்​திர ஹூடா வாதிடும்​போது, “மத நல்​லிணக்​கத்தை சீர்​குலைக்​கும் நோக்​கில் கடந்த, 1862,1902 ஆகிய ஆண்​டுகளில் சிலர் தீபத்தை தர்கா அரு​கில் ஏற்ற முயன்​றபோது அது தடுக்​கப்​பட்​டது.

இதையடுத்து, 1994-ம் ஆண்டு தர்கா அரு​கில் தீபம் ஏற்ற வேண்​டும் எனக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், தர்கா அரு​கில் தீபம் ஏற்​று​வது மரபு கிடை​யாது, எனவே கோரிக்கை ஏற்க முடி​யாது என தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

அதேபோல், தர்கா சார்​பில் நெல்​லித் தோப்பு பகுதி​யில் விலங்​கு​களை பலி​யிட்டு வழிபட அனுமதிக்க முடி​யாது. நூற்​றாண்டு பழமையான நடை

முறையை மாற்ற முடி​யாது, கடைபி​டிக்​கப்​படாத புதிய மரபு​களை மத வழிபாடு எனக்​கூறி சேர்க்​கவும் முடி​யாது என திட்​ட​வட்​ட​மாக கூறியுள்​ளது” என்​றார்.

மேலும், “மலை​யில் உள்ள கோயிலுக்கு அருகேதான் 150 ஆண்​டுகளுக்கு மேலாக தீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது. தர்கா அருகே தீபம் ஏற்​றப்​பட்ட வரலாறு கிடை​யாது, எனவே, தர்கா அருகே உள்ள கல்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று கூறு​வதை ஏற்க முடி​யாது. தற்​போது கல்​தூணில் தீபம் ஏற்ற அனுமதித்​தால் பின்​னர் அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்​டும் என்ற கோரிக்கை வைப்​பார்​கள், இது பிரச்​சினைகளுக்கு வழி வகுக்​கும்” என வாதிட்​டார்.

ராம ரவிக்​குமார் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வள்​ளியப்​பன் மற்​றும் வழக்​கறிஞர் லக் ஷ்​மண் ராஜா ஆகியோர், “தர்​கா​வுக்கு படிக்​கட்​டுகள், கொடிமரம், புது மண்​டபம் என அனைத்​தையும் சேர்த்து 86 சென்ட் நிலம்​தான் சொந்​த​மாக உள்​ளது, ஆனால், கோயிலுக்கு 171.17 ஏக்​கர் நிலம் உள்​ளது, அந்த குறிப்​பிட்ட கல்​தூண் கோயில் நிலத்​தில் அமைந்​துள்​ளது அதில்​தான் தீபம் ஏற்ற வேண்​டும் என கோரு​கிறோம்.

தற்​போது குறிப்​பிட்ட கல் தூணில் விளக்கு ஏற்​றும் வகை​யில் குழிவான அமைப்பு இருக்​கின்​றது அதில் நெய் ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்​றினால் இரண்டு மணி நேரம் தீபம் அணை​யாமல் எரியும். தமிழகத்​தில் மருதமலை, சுவாமிமலை, பழனி மலை முருகன் கோயில்​களி​லும் இவ்​வாறுதான் தீபம் ஏற்​றப்​படு​கிறது. ஆண்​டுக்கு ஒரு நாள் 2 மணி நேரம் மட்​டும் அந்த குறிப்​பிட்ட கல்​தூணில் தீபம் ஏற்​று​வ​தால் யாருக்கு என்ன பிரச்​சினை ஏற்​பட்டு விடப்​போகிறது” என தெரி​வித்​தனர். இதையடுத்து, வழக்கு விசா​ரணையை இன்று காலை 10.30 மணிக்கு நீதிப​தி​கள் தள்​ளிவைத்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT