தமிழகம்

நேபாளத்தில் மாயமான 49 தமிழர்களின் நிலை என்ன? - சீன அரசிடமிருந்து தகவல் பெற்றுத் தர வேண்டும்: டிராவல் ஏஜென்சி நிர்வாகி கோரிக்கை

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை: குரோம்​பேட்டை ராதா நகரில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறு​வனம் மூலம் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த 49 பேர் கடந்த 14-ம் தேதி ஆன்​மிகப் பயண​மாக நேபாளம் சென்​றனர்.

பயணத்தை முடித்து கடந்த 27-ம் தேதி சென்னை திரும்ப இருந்த நிலை​யில், சீனா-நே​பாள எல்​லை​யில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளத்​தில் அவர்​கள் மாய​மான​தாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து டிராவல் ஏஜென்சி நிர்​வாகி மாறவேல் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சம்​பவத்​தன்று இமிக்​ரேஷன் அலு​வல​கத்​துக்கு வெளியே எங்​கள் குழு​வினர் காத்​திருந்​தனர்.

வெள்​ளம் ஏற்​பட்​டதும் அவர்​கள் பாது​காப்​புக்​காக ஓடிச் சென்​றதை சிசிடிவி காட்​சிகள் மூலம் உறுதி செய்​தோம். நேபாளத்தில் மருத்​து​வ​மனை​கள், மீட்பு முகாம்​கள் உள்​ளிட்ட இடங்​களில் தேடி​யும்கிடைக்​க​வில்​லை.

தற்​போது காணா​மல் போனவர்​கள் குறித்த தகவல்​கள் நேபாள அரசிடம் இருந்து மட்​டுமே கிடைக்​கின்​றன. சீன அரசிடம் இருந்து எந்​தத் தக

வலும் வரவில்​லை. எனவே தமிழக அரசு தலை​யிட்டு சீன அரசிடம் இருந்து 49 பேரின் நிலை குறித்த தகவல்​களைப் பெற்​றுத் தர வேண்​டும்​ என்​றார்​.

SCROLL FOR NEXT