தமிழகம்

காணும் பொங்கல்: சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?

செய்திப்பிரிவு

சென்னை: காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்​டிகை​யின் ஒரு பகு​தி​யாக காணும் பொங்கல் சனிக்கிழமை உற்சாகமாக கொண்​டாடப்​படவுள்ளது. இந்நாளில் பொது​மக்​கள் கடற்​கரை, பூங்கா உள்ளிட்ட பொழுது​போக்கு மையங்​களுக்கு குடும்பம், குடும்பமாக சென்று உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே மக்​கள் அதிகள​வில் கூடும் இடங்​களில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் இருக்க காவல் ஆணை​யர் அருண் சென்னையில் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​துள்​ளார்.

குறிப்​பாக நகர் முழு​வதும் 16 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்டுள்ளனர். இவர்​களு​டன் 1,500 ஊர்க்​காவல் படை​யினர் ஒருங்​கிணைந்து பணி​யாற்றுகின்றனர். மெரினா கடற்​கரை​யில் மட்​டும் சுமார் 3 லட்​சம் பேர் திரள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனவே உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்​காலிக காவல் கட்​டுப்​பாட்​டறை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த பகு​தி​களில் உள்ள 7 சர்​வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்​களில் காவல் உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்டுள்ளன.

அவசர மருத்​துவ உதவிக்​காக மருத்​து​வக் குழு​வினருடன் 8 ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் மற்​றும் மீட்​புப் பணிக்​காக தீயணைப்பு வீரர்​கள் அடங்​கிய 2 தீயணைப்பு வாக​னங்​கள் தயார் நிலை​யில் நிறுத்தி வைக்​கப்பட்டுள்ளன. மீட்​புப் பணிக்​காக மோட்​டார் படகு​கள் மற்​றும் 200-க்​கும் மேற்​பட்ட நீச்​சல் தெரிந்த தன்​னார்​வலர்​கள் தயார் நிலை​யில் உள்ளனர்.

காணும் பொங்கலன்று மெரி​னா​வில் குளிக்​கத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் கடலில் இறங்​கு​வதைத் தடுக்க கடற்​கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கூட்ட நெரிசலில் குழந்​தைகள் காணா​மல் போனால் அவர்​களை உடனடி​யாக மீட்​ப​தற்​காக குழந்​தைகள், சிறு​வர்​கள் மற்​றும் சிறுமிகளின் கைகளில் பிரத்​யேக அடை​யாளப் பட்டை (பேண்ட்) கட்​டி​விடப்படுகிறது.

மெரினா கடற்​கரை மணற்​பரப்​பில் 4 ட்ரோன் கேம​ராக்​கள் மற்​றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை மணற்​பரப்​பில் 4 ட்ரோன் கேம​ராக்​கள் என மொத்​தம் 8 கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​பட்​டு, தீவிர​மாக கண்​காணிக்​கப்​படுகிறது. மேலும் அதிக திறன் கொண்ட ‘ஏஐ’ ட்ரோன் கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​பட்டு அவை மூலம் கடலோர மணற்​பகு​தி​களில் உள்ள பொது​மக்​களுக்கு காவல் துறை​யின் எச்​சரிக்​கைத் தகவல்​களை ஒலிபரப்​பி வருகின்றனர்.

இதேபோல கிண்டி சிறு​வர் பூங்​கா, தீவுத்​திடலில் உள்ள சுற்​றுலா பொருட்​காட்​சி, செம்​மொழி பூங்கா உள்​ளிட்ட இடங்​களி​லும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே​போல் பைக் ரேஸ் மற்​றும் சாகசத்தை தடுப்​ப​தற்​காக கிண்​டி, அடை​யாறு, தரமணி, நீலாங்​கரை, துரைப்​பாக்​கம், மதுர​வாயல்​ உள்​ளிட்​ட பகு​தி​களில்​ கண்​காணிப்​பு சோதனை குழுக்​கள்​ அமைக்​கப்​பட்​டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT