தமிழகம்

டெங்கு தடுப்புக்காக பள்ளிகளில் வாரந்தோறும் சிறப்பு தூய்மைப் பணி: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ‘டெங்கு தடுப்​புக்​காக பள்​ளி​களில் வாரந்​தோறும் புதன்​கிழமை சிறப்பு தூய்​மைப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும்’ என பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் டெங்கு காய்ச்​சல் பாதிப்பு அதி​க​மாக இருக்​கிறது. இதையடுத்து முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் பள்ளி வளாகங்​களில் தூய்​மைப் பணி​கள் மற்​றும் கொசு உற்​பத்தி தடுப்பு நடவடிக்​கைகள் குறித்த வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வழங்​கப்​பட்​டுள்​ளன.

பள்ளி மாணவர்​களின் உடல்​நலம் மற்​றும் பாது​காப்பை உறு​தி​செய்​யும் வகை​யில் அனைத்து பள்ளி வளாகங்​களி​லும் கழி​வு​கள் தேங்​குதல், தேவையற்ற பொருட்​கள் குவிந்து கிடத்​தல், மழை நீர் தேங்​குதல் ஆகிய​வற்றை முழு​வதும் தவிர்க்​கும் வகை​யில் தொடர் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​ள வேண்​டும்.

இதுத​விர அனைத்து பள்​ளி​களி​லும் ஒவ்​வொரு புதன்​கிழமை​யும் ‘மாபெரும் தூய்மை புதன்​கிழமை’ என்ற சிறப்பு தூய்​மைப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும்.

தூய்​மைப் பணி​கள் மற்​றும் கொசு உற்​பத்தி தடுப்பு நடவடிக்​கைகள் மாவட்ட, வட்​டாரக்​கல்வி அலு​வலர்​கள், தலைமை ஆசிரியர்​களால் முறை​யாக மேற்​கொள்​ளப்​படு​கிறதா என்​ப​தைக் கண்​காணித்து அரசுக்கு அறிக்​கையை முதன்மை கல்வி அலு​வலர் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

இதற்​கிடையே, தமிழகத்​தில் நேற்று முன்​தினம் சென்​னை​யில் சுமார் 100 பேர் உட்பட மாநிலம் முழு​வதும் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்​டறியப்​பட்​டுள்​ளது. இது​வரை டெங்கு பாதிப்​பால் 9 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கிய பிறகு டெங்கு பாதிப்பு மேலும் உயரும் என்​ப​தால், சுகா​தா​ரத்​துறை பல்​வேறு துறை​களு​டன் இணைந்து தடுப்பு பணி​யில் ஈடு​பட்டு வரு​கிறது.

SCROLL FOR NEXT