பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா

 
தமிழகம்

வேத மந்திரங்கள் முழங்க திருமணம்: துரைமுருகனுக்கு எச்.ராஜா பாராட்டு

செய்திப்பிரிவு

வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல விழாவில் வேதமந்திரங்கள் முழங்கத் திருமணம் நடைபெற்றதற்கு எனது பாராட்டு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட பாஜக சார்பில், ‘ஜனநாயகத்தை காப்போம், தேசத்துக்கு எதிரான கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் தேசிய கொடியேந்திய பேரணி நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் கோ.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறும்போது, ‘‘நடந்து முடிந்த தேர்தலில் ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருக்கிறார். அவரை நான் முதன்முதலில் ஜோசப் விஜய் என சொன்னதற்கு நீங்கள் எல்லாம் என்னை, மத கண்ணோட்டத்தில் பார்க்கிற மாதிரி சொன்னீர்கள்.

ஆனால், இப்போது உண்மை தெரிந்து விட்டது. இந்த நிர்வாகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழ்நாடு அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை.

திமுக பொதுச்செயலாளர் இல்ல திருமண விழாவில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்துள்ளது. இது புதிதல்ல. துரைமுருகன் வீட்டில் இதற்கு முன்னாள் ஹோமம் எல்லாம் வளர்த்துள்ளார்கள்.

திமுகவில் உள்ள தலைவர்கள் அவர்கள் வீட்டில் இந்து முறைப்படி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்கள். பிறகு ஸ்டாலினை அழைத்து வந்து ஷோ காட்டுவது என்பது பழக்கம் தான். ஓட்டுக்கு பயந்து இந்து வேஷம் போட்டாலும் சரி, அல்லது உள் மனதில் இருந்து இந்து வேஷம் போட்டாலும் சரி துரைமுருகனுக்கு எனது பாராட்டுக்கள்’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT