மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி

 
தமிழகம்

“மக்களுக்கு விரோதமாக தவெக அரசு செயல்பட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்” - எம்.ஏ.பேபி

வெற்றி மயிலோன்

சென்னை: “மக்களுக்கு விரோதமாக தவெக அரசு செயல்பட்டால், வீதியில் இறங்கி போராடுவோம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட கருத்து: “தவெக ஆட்சி அமைக்க நாம் ஆதரவுக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் நமக்கு அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார். எனினும், அந்தப் பதவி வாய்ப்பை மறுத்து, கொள்கைக்காக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக்கும் முடிவை இடதுசாரிக் கட்சிகள் எடுத்தன.

மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன்கள் மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களை தவெக அரசு பாதுகாக்கும் வரை ஆதரிப்போம். மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கி போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT