தமிழகம்

யுபிஐ கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் வங்கியில் அனைத்து வணிகரும் கணக்கு தொடங்குவோம் - வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: யுபிஐ பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும் என மத்​திய அரசு அறி​வித்​ததை கண்​டித்து தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு மாநில தலை​வர் எஸ்​.சவுந்​தர்​ராஜன் தலை​மை​யில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்​ட ரங்கம் அரு​கில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இதில் அவர் பேசி​ய​தாவது: யுபிஐ என்​பது டிஜிட்​டல் பொருளாதாரத்​தின் மையப்​புள்​ளி​யாக இன்று மாறி​யுள்​ளது. நாட்டின் மொத்த டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களில் 85 சதவீதம் யுபிஐ மூல​மாக நடப்​ப​தால், காகித பரிவர்த்​தனையை குறைக்​கும் நோக்கம், அதன் இலக்கை நெருங்​கி​விட்​டது. கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ-​யின் பயன்​பாடு விரிவடைந்​தது. கட்​ட​ணம் எது​வும் இல்​லாத​தால் வணிக நிறு​வனங்​களும் உள்ளே இழுக்கப்பட்​டன.

சிறு, குறு வணி​கர்​கள் முதல் பெருநிறு​வனத்​தினர் வரை அதைகையாளத் தொடங்​கினர். ஜிஎஸ்​டி, உள்​ளூர் வரி​கள், வாடகை, மின்​கட்​ட​ணம், ஊழியர்​கள் சம்​பளம், பெட்​ரோல், டீசல் பயன்​பாடு, கடன்​கள் என வணி​கர்​கள் பல்​வேறு நெருக்​கடி​யில் தவிக்​கும் நிலை​யில் இந்த யுபிஐ பரிவர்த்​தனைக் கட்​ட​ணம் கூடுதல் சுமை​யாகும். யுபிஐ பரிவர்த்​தனை கட்​டணத்தை ஏற்​றுக்​கொள்​ளும் வங்​கி​களில் வணி​கர்​கள் அனை​வரும் கணக்கு தொடங்​கு​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT