முதல்வர் விஜய்

 
தமிழகம்

“உலகத் தரம் வாய்ந்த சீர்மிகு நகராக உயர்த்துவோம்” - சென்னை நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: “நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்,” என்று சென்னை நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவவில், “வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்.

வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.

சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். வளரட்டும் சென்னைப் பெருநகரம். உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT