சமத்​துவ பொங்​கல் விழாவில் பங்கேற்ற பிரேமலதா

 
தமிழகம்

“இம்மாத இறுதிக்குள் கூட்டணியை அறிவிப்போம்” - பிரேமலதா தகவல்

செய்திப்பிரிவு

இந்த மாத இறு​திக்​குள் கூட்​டணி அறிவிக்​கப்​படும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​துள்​ளார்.

தேமு​திக சார்​பில் சமத்​துவ பொங்​கல் விழா கோயம்​பேட்​டில் உள்ள கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த விழா​வில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி செய​லா​ளர் விஜயபிர​பாகரன் மற்​றும் நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இவ்​விழா​வில் மகளிர் அணி​யினருடன் பிரேமலதா இணைந்து பொங்​கல் வைத்​தார். தொடர்ந்து உறியடித்​தல், கயிறு இழுத்​தல் போன்ற விளை​யாட்டு போட்​டிகள் நடத்​தப்​பட்டு வெற்றி பெற்​றவர்​களுக்கு பரிசுகள் வழங்​கப்​பட்​டன.

இதையடுத்து நிகழ்ச்​சி​யில் பேசிய பிரேமல​தா, சமீபத்​தில் கடலூரில் நடை​பெற்ற மாநாட்டை வெற்றி பெற​வைத்த தொண்​டர்​களுக்கு நன்றி தெரி​வித்​து, தொண்​டர் விரும்​பும் வெற்றி கூட்​ட​ணியை தேமு​திக அமைக்​கும் என தெரி​வித்​தார்.

நிகழ்ச்​சிக்கு பின் செய்​தி​யாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது: இந்​தப் பொங்​கல் தமி​ழ​கத்​துக்​கும், தமிழக மக்​களுக்​கும் ஒளிமய​மான எதிர்​காலத்தை நிச்​சய​மாக உரு​வாக்​கும். இந்த தேர்​தலுக்கு பின் அமை​யும் ஆட்சி மக்​களுக்​கும் நாட்​டுக்​கும் நல்​லது விளைவிக்​கும். கூட்​டணி குறித்து மாவட்ட செய​லா​ளர்​கள் அவர்​களின் கருத்​துகளை தெரி​வித்​துள்​ளனர். நாங்​கள் அதை கவனத்​தில் எடுத்​துள்​ளோம். தேமு​திக நாட்​டுக்​கும், மக்​களுக்​கும் நல்​லது செய்​கின்ற மகத்​தான கூட்​ட​ணியை அமைக்​கும்.

இந்த நேரத்​தில் திமுக கூட்​ட​ணி​யில் ஏற்​க​னவே உள்​ளவர்​கள் தொடர்​கி​றார்​கள், புதி​தாக யாரும் இணை​ய​வில்​லை. அதி​முக கூட்​ட​ணி​யிலும் இன்​னும் யார் உள்​ளார்​கள் கூற​வில்​லை, இவ்​வாறு இரண்டு கூட்​ட​ணி​யும் இன்​னும் உறு​தி​யாக​வில்​லை. அப்​படி இருக்​கும்​போது சிறிது சிந்​தித்து ஒரு தெளி​வான நல்ல முடிவை எடுக்க வேண்​டும் என்று மாவட்ட செய​லா​ளர்​கள் கூறி​யுள்​ளனர். நிச்​ச​யம் ஒரு நல்ல முடிவை எடுப்​போம். பொங்​கலுக்கு பின் தமி​ழ​கத்​தில் அரிய மாற்​றங்​கள் நிகழும். அந்த மாற்​றங்​கள் கூட்​ட​ணியை உறுதி செய்​யும்.

தேமு​தி​க​வில் யார் போட்​டி​யிடு​வார்​கள், எங்கு போட்​டி​யிடு​வார்​கள் என்​பது குறித்து கூட்​டணி அமைந்​தவுடன் முடிவு செய்​யப்​படும். அடுத்த மாதம் நான்​காம் கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளவுள்​ளோம், விருப்ப மனுக்​கள் பெற வேண்​டும். இவ்​வாறு பல வேலை​கள் உள்​ளது. ஜனவரி மாதத்​துக்​குள் கூட்​டணி இறுதி செய்​யப்​பட்டு அறிவிக்​கப்​படும்.

போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த செவிலியர்​கள், தூய்மை பணி​யாளர்​களின் கோரிக்​கையை நிறை​வேற்​று​வ​தாக அரசு அறி​வித்​துள்​ளது. அதே​போல இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கை​களை நிறைவெற்றி அவர்​களின் போராட்​டத்​தை​யும் முடித்து வைக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT