தமிழகம்

‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் விரைவில் கட்சியாக மாறும்: மதுரையில் அண்ணாமலை அறிவிப்பு

செய்திப்பிரிவு

மதுரை: ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கம் மிக விரை​வில் அரசி​யல் கட்​சி​யாக மாறும் என அதன் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் அண்​ணா​மலை தெரி​வித்​தார்.

மதுரை​யில் அமைப்பு சார்​பில்வைகை ஆற்​றைத் தூய்மை செய்​யும் பணியில் ஈடு​பட்​டோருக்கு விருது வழங்​கும் விழா நேற்று நடை​பெற்றது. இதில் அமைப்​பின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் அண்​ணா​மலை விருதுகளை வழங்​கிப் பேசி​ய​தாவது: மதுரை வைகை ஆற்​றில் ஆக.3-ல் இருந்து கள்​ளழகர் ஆற்​றில் இறங்​கும் இடம் உள்பட33 ஏக்​கர் பகு​தி​யைச் சுத்​தம் செய்​துள்​ளோம். இப்​பணி​யில் 163 டன் குப்பை சேகரிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் புதிய அரசி​யலை, புதிய எழுச்​சியை ஏற்​படுத்த வேண்​டும் என்ற நோக்​கில் வீ த லீடர்ஸ் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்பு சார்​பில் 10.17 லட்​சம் மரக்​கன்றுகள் நடப்​பட்​டுள்ளன. அமைப்புதொடங்கி 105-வது நாளில் உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை 20 லட்​சத்தை தாண்​டி​யுள்​ளது. அரசி​யல் குப்​பையை​யும் அகற்றும் காலம் வந்துள்ளது.

ஜல்​லிக்​கட்டு இளைஞர்​களை சீரழிப்​ப​தாக சோழ​வந்​தான் எம்​எல்ஏ பேசி​யுள்​ளார்.அந்த நேரத்​தில் பேர​வை​யில் இருந்த முதல்​வர், தவெக எம்​எல்ஏ பேச்​சுக்கு ஆட்​சேபம் தெரி​வித்​திருக்க வேண்​டும். நமது மொழியை உயர்த்​திப்பிடிக்க வேண்​டும். அதற்​காக இன்னொரு மொழி படிக்க வேண்​டாம் என கூறக் கூ​டாது.

மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு ‘பாஸ்’ களை பிளாக்​கில் சினிமா டிக்​கெட் விற்​பது போல் விற்​றுள்​ளனர். விஐபிகள் மட்​டுமே குட​முழுக்​கைப் பார்த்​தனர்.

பொது​மக்​களை அனு​ம​திக்​க​வில்​லை. கோயி​லின் மாட வீதி​கள் விஐபிகளின் வாக​னங்​களை நிறுத்​த​வா உள்​ளது. 4 பேருக்கு மட்​டுமே தீர்த்​தம் தெளித்​தனர். மற்​றவர்​களின் மேல் தண்​ணீர்​தான் தெளிக்​கப்​பட்​டது. பாது​காப்​புப் பணியை மேற்​கொள்ள வேண்​டிய போலீ​ஸாரை பொது​மக்​கள் மீது தண்​ணீர் தெளிக்​கப் பயன்​படுத்தி உள்​ளனர்.

கோயி​லில் செல்​போன் தடை நியா​யம் அல்ல. இப்​படிச் செய்​தால் கோயிலுக்கு வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை குறை​யும். இதற்கு எதி​ராக முதலில் குரல் கொடுத்​தது நாம் தான். சட்​டப்​பேர​வை​யில் எதை எதையோ பேசுகிறார்​கள். பேச வேண்​டியதை பேசுவ​தில்​லை.

பெரி​யாரை முழு​மை​யாக ஏற்​க​வில்​லை. பெண் விடு​தலை, சாதி ஒழிப்பை ஏற்​கிறோம். கடவுள் மறுப்​புக் கொள்​கை, பிராமணர்​கள் எதிர்ப்பை ஏற்​க​வில்​லை. நாம் ஆட்​சிக்கு வரும்​போது ஸ்ரீரங்​கம் கோயிலுக்கு முன்​புள்ள கடவுள் மறுப்பு கல்​வெட்டு அகற்​றப்​படும். இந்த இயக்​கம் விரை​வில் அரசி​யல் கட்​சி​யாக மாறு​வது உறு​தி.

முதல்​வர் முதலீடு​களை ஈர்க்க லண்​டன் சென்​றிருக்​கக் கூடாது. அது பழைய காலத்து அரசி​யல். இங்​கிலாந்து நாட்​டில் பணமே இல்​லை. அங்கு ஒரு சதவீத வளர்ச்​சி​தான் உள்​ளது. அங்​கிருந்து எப்​படி முதலீடு வரும். தமிழக முதல்​வர் கோவைக்​கும், மதுரைக்​கும் வந்து தொழில​திபர்​களிடம் பேசி சலுகைகள் தரு​வ​தாக தெரி​வித்து தொழில்​களை மாநிலம் முழு​வதும் விரி​வாக்​கம் செய்​யு​மாறு கூற வேண்​டும்.

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்​டும். நாளை நாம் ஆட்​சிக்கு வந்​தா​லும் ஓராண்டு அவகாசம் வேண்டும். வீ த லீடர்ஸ் இயக்​கத்தில் ஒவ்​வொரு தொகு​திக்​கும் 30 ஆயிரம் பேரை உறுப்பினர்​களாகச் சேர்க்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT