மேட்டூர் அணை |கோப்புப் படம்
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 531 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 333 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 531 கனஅடியாக அதிகரித்தது. காவிரி கரையோர மக்களின் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட நீர் வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது.நீர்மட்டம் 82.64 அடியிலிருந்து 82.56 அடியாகவும், நீர் இருப்பு 44.63 டிஎம்சியில் இருந்து 44.55 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.