பொன் மாணிக்கவேல் | கோப்புப்படம் 
தமிழகம்

மகாதேவப்பட்டினத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன விஷ்ணு சிலை கலிபோர்னியாவில் உள்ளது: பொன் மாணிக்கவேல்

செய்திப்பிரிவு

திருவாரூர்: ​திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி அரு​கே​யுள்ள மகாதேவப்​பட்​டினம் ஸ்வேத வராக விஷ்ணுகோயி​லில் இருந்து 60 ஆண்​டு​களுக்கு முன்பு திருடு​போன ஸ்வேத வராக விஷ்ணு சிலையை கலி​போர்​னி​யா​வில் உள்ள மியூசி​யத்​தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என ஓய்​வு​பெற்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல் போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார்.

          

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள மகாதேவப்பட்டினத்தில் அமைந்துள்ள வராகப் பெருமாள் கோயில் (ஸ்வேத வராக விஷ்ணு கோயில்) 400 ஆண்டுபழமையானதாகும். தஞ்சை சர போஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இ

க்கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருடுபோன விஷ்ணு சிலை குறித்து மன்​னார்​குடி​யில் நேற்று பொன்.மாணிக்கவேல் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.​யாக நான் பணி​யாற்​றிய​போது, மன்​னார்​குடி அரு​கே​யுள்ள மகாதேவபட்​டினம் ஸ்வேத வராக விஷ்ணு கோயி​லில் இருந்த 300 ஆண்​டு​கள் தொன்​மை​யான சுவாமி சிலை அமெரிக்​கா​வில் உள்ள கலி​போர்​னியா மாகாணம் பாதடி​னா​வில் உள்ள நார்த்​தன் சைமன் மியூசி​யத்​தில் இருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இந்​தக் கோயி​லில் 1959-ம் ஆண்டு இந்து சமய அறநிலை​யத் துறை​யின் அங்​கீகரிக்​கப்​பட்ட புகைப்பட கலைஞர்​கள் மூலம் எடுக்​கப்​பட்ட புகைப்​படத்​துடன், அங்​குள்ள சிலையை ஒப்​பிட்டு பார்த்​தோம். அதில், அந்த மியூசி​யத்​தில் உள்ள சிலை மகாதேவப்​பட்​டினம் ஸ்வேத வராக விஷ்ணு சிலை​தான் என உறு​திப்​படுத்​தப்​பட்​டது. குறிப்​பாக, அந்த சிலைபஞ்​சலோக சிலை​தானா என்​பதை உறு​தி​செய்​வதற்​காக, இந்த சிலை​யில் விஷ்ணு கையில் இருக்​கும் சக்​கரம் வெட்டி எடுக்​கப்​பட்டு பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​பிறகே சிலை கடத்​தப்​பட்​டுள்​ளது.

60 ஆண்​டு​களுக்கு முன்பு கடத்​தப்​பட்ட இந்​தச் சிலை, கோயி​லில் இருந்து காணா​மல் போனது குறித்து இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் எவ்​வித புகாரும் தெரிவிக்​கப்​பட​வில்​லை. அதனால், இந்​தச் சிலை திருட்டு அதி​காரி​களுக்கு தெரிந்தே நடந்​துள்​ளதா என்​பதை தெளிவுபடுத்த வேண்​டும்.

மேலும், இந்த சிலையை உடனடி​யாக இந்​தி​யா​வுக்கு கொண்​டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என பரவாக்​கோட்டை காவல் நிலை​யத்​தில் ஆன்​லைன் வாயி​லாக புகார் அளித்​துள்​ளேன். நான் எந்த கட்​சிக்​கும் ஆதர​வாக செயல்​படு​பவனல்ல. காணா​மல்​போன நமது தொன்​மை​யான கடவுள்​களின் சிலைகள் கண்​டு​பிடிக்​கப்பட வேண்​டும் என்​பது​தான் என் விருப்​பம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT