விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,800 கண் திருஷ்டி கணபதி யந்திரங்கள் மற்றும் 2,800 கண் திருஷ்டி சூரிய சக்கரங்களால் ஆன 42 அடி விநாயகர் சிலை. (அடுத்த படம்) 12,000 மகாலட்சுமி சங்கு, 4,000 சிப்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 41 அடி உயரம் 32 அடி அகலம் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர். (கடைசி படம்) 250 கிலோ அரகஜா கண் மை மூலம் உருவாக்கபட்ட விநாயகர் சிலை. | படங்கள்: ம.பிரபு |

 
தமிழகம்

களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: மக்களை கவர்ந்த பிரம்மாண்ட சிலைகள்

செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்​டி, சென்​னை​யில் பொது இடங்​களில் பிர​திஷ்டை செய்​யப்​பட்டு வழி​பாடு நடத்​தப்​பட்ட பிரம்​மாண்ட விநாயகர் சிலைகள் பொது​மக்​களை வெகு​வாக கவர்ந்​தது.

முழு​முதற் கடவுளான விநாயகப் பெரு​மானின் அவதார தின​மான விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழு​வதும் நேற்று முன்​தினம் கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்​டது. தமிழகத்​தைப் பொருத்​தவரை சென்​னை​யில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. பொது​மக்​கள் வழி​பாட்​டுக்​காக சென்​னை​யில் 1,500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பிரம்​மாண்ட விநாயகர் சிலைகள் நிறு​வப்​பட்டு வழி​பாடு​கள் நடந்​தன.

கொளத்​தூர் பூம்​பு​கார் நகரில், 2,900 கண் திருஷ்டி கணபதி எந்​திரத் தகடு​கள் மற்​றும் 2,800 சூரிய சக்​கரத் தகடு​களால் உரு​வாக்​கப்​பட்ட 42 அடி உயர பிரம்​மாண்ட விநாயகர் சிலை நிறு​வப்​பட்​டுள்​ளது.

இந்த சிலை​யைத் தரிசிக்க சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான மக்​கள் திரண்டு வரு​கின்​றனர்.

அதே​போல், கொளத்​தூரின் மற்​றொரு பகு​தி​யில் 12 ஆயிரம் வலம்​புரி சங்​கு​கள் மற்​றும் 2 ஆயிரம் சிப்​பிகளால் நேர்த்​தி​யாக உரு​வாக்​கப்​பட்ட 40 அடி உயர சிலை​யும் நிறு​வப்​பட்​டுள்​ளது. மங்​காரம் தோட்​டம் பகு​தி​யில் ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்​டு​களால் ஆன 15 அடி உயர விநாயகர் சிலை​யும், சி.ஐ.டி நகரில் ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்​டு​கள் மற்​றும் நாண​யங்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட சிலை​யும் பொது​மக்​கள் கவனத்தை ஈர்த்​துள்​ளன.

மேற்கு மாம்​பலம் லட்​சுமி நகரில், கருப்பு எள்​ளு, வெள்ளை எள்​ளு, பருப்பு வகைகள் உள்​ளிட்ட 160 கிலோ நவதானி​யங்​களால் 11 அடி உயரத்​தில் நவதானிய விநாயகர் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. மணலி​யில் 3,500 கடல் சிப்​பிகளால் 21 அடி உயரச் சிலை​யும், மணலி புதுநகரில் 15 ஆயிரம் மண் அகல் விளக்​கு​களால் 30 அடி உயரச் சிலை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், திரு.​வி.க. நகரில் 300 புட​வை​கள், 200 வேட்​டிகள் மற்​றும் 250 துண்​டு​களைக் கொண்டு ஆடை வடிவி​லான விநாயகர் பிர​திஷ்டை செய்​யப்​பட்​டுள்​ளது.

வீடு​களில் வைத்து வழிபட்ட சிறிய சிலைகளை பொது​மக்​கள் நீர்​நிலைகளி​லும் கடலிலும் கரைத்து வரு​கின்​றனர்.

பொது இடங்​களில் பிர​திஷ்டை செய்​யப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட விநாயகர் சிலைகள் அனைத்​தும் வரும் 19 மற்​றும் 20 ஆகிய தேதி​களில் மேள​தாளங்​கள் முழங்க பிரம்​மாண்ட ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​பட்​டு, சென்​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட 4 கடற்​கரைப்​ பகு​தி​களில்​ கரைக்​கப்​பட உள்​ளன.

SCROLL FOR NEXT