இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்சித் பாரத் சிற்பி’ விருதை வழங்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
சென்னை: மும்பையில் அக்டோபர் 23-ம் தேதி, நடைபெற்ற நிகழ்வில், இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலருமான டாக்டர் வி. நாராயணனுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ‘விக்சித் பாரத் சிற்பி’ (Architect of Viksit Bharat Award) என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு டாக்டர் நாராயணன் அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளையும், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கையும் அங்கீகரிக்கிறது.
இந்த கவுரவம், இந்தியாவின் வளர்ச்சிக்கும், ‘விக்சித் பாரத்’ எனும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் இஸ்ரோ ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பிரதிபலிக்கிறது.