தமிழகம்

சிறையில் அடித்து கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சிறையில் அடித்து கொல்​லப்​பட்ட சபரிவர்​மன் குடும்​பத்​துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்​டும் என்​று, தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில் கூறியிருப்பதாவது: நாகர்​கோ​வில், சாமிதோப்பு பகு​தி​யில் ஈத்​தாங்​காட்​டைச் சேர்ந்த சபரிவர்​மன் தனது வாழ்​ வா​தா​ரத்​துக்​காக சிறு​பெட்​டிக் கடை நடத்தி வந்த ஏழை வணிகர்.

அற்ப காரணத்​துக்​காக கைது செய்​யப்​பட்டு சிறையில் அடைக்​கப்​பட்​டு, சிறைக் காவலர்​களால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். சிறைத் துறை​யால் சபரிவர்​மன் கொலை செய்​யப்​பட்​டிருப்பது எவராலும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாத ஒன்​று.

தமிழ்​நாடு வணி​கர்​சங்​கங்​களின் பேரமைப்​பு, இது​போன்ற சம்​பவங்​கள் இனி​யும் நடை​பெறக்​கூ​டாது என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறது. லஞ்​சம், போதைப்​பொருள் ஒழிப்​பில் இப்​பேரமைப்பு அரசுக்கு ஆதர​வாக இருக்​கும்.

சிறை​யில் கொலை செய்​யப்​பட்ட சபரிவர்​மன் குடும்​பத்​துக்கு நிவாரணம் ரூ.1 கோடி அறிவிக்க வேண்​டும். படித்து பட்​டம் பெற்ற அவரது மனை​விக்கு அரசுத் துறை​யில் தகு​தி​யான வேலை வழங்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மாற்​றுத் திற​னாளி​யான சபரிவர்​மன் சந்​தேகத்​துக்​குரிய வகை​யில் மரணம் அடைந்​திருக்​கிறார். அவரது உடலில் 19 இடங்​களில் கடுமை​யான காயங்​கள் இருந்​தன. இது கண்​டனத்​துக்​குரியது. இதுகுறித்து சிபிஐ வி​ராணை நடத்த வேண்​டும்” என வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT