ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு குற்றப் பத்திரிகை

ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு குற்றப் பத்திரிகை
Updated on
1 min read

சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட விவ​காரத்​தில், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மாநில நிர்​வாகி​யான கேசவ விநாயகம் உள்​ளிட்​டோருக்கு வழக்கு தொடர்​பான குற்​றப் பத்​திரிகை நகல் வழங்​கப்​பட்​டது.

கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற நாடாளு​மன்ற தேர்​தல் நேரத்​தில், தாம்​பரம் ரயில் நிலை​யத்​தில், நெல்லை விரைவு ரயி​லில் கொண்டு செல்​லப்​பட்ட ரூ. 4 கோடி ரொக்​கப் பணத்தை தேர்​தல் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​தனர்.

இதுதொடர்​பாக, பாஜக மாநிலத் தலை​வ​ரான நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் அமைப்​புச் செய​லா​ள​ரான கேசவ விநாயகம் மற்​றும் நிர்​வாகி​களான எஸ்​.ஆர்​.சேகர், கோவர்​தன், விக்​னேஷ் உள்​ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இவ்வழக்​கில் குற்​றப்​பத்​திரிகை நகல் பெறு​வதற்​காக நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட 13 பேரும் நேற்​று, ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி சுந்​தர​பாண்​டியன் முன்​பாக ஆஜராகி, குற்​றப்​பத்​திரிகை நகலைப் பெற்​றுக் கொண்​டனர்.

ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு குற்றப் பத்திரிகை
ரூ.11.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கள்ள நோட்டுகளை கடத்திய பெண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in