தமிழகம்

தேர்தல் கால பணப்பரிவர்த்தனையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்: விக்கிரமராஜா

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் கால பணப்​பரிவர்த்​தனை தொடர்பாக தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தலை​வர் விக்​கிரம​ராஜா வெளி​யிட்ட அறிக்​கை: இந்​திய தேர்தல் ஆணை​யத்​தின் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தவுடன் ரொக்​கப் பணபரிவர்த்​தனை ரூ.50 ஆயிரம் வரை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது.

பொது​மக்​களின் பயன்​பாடு கால​மாற்​றங்​களை கருத்​தில் கொண்​டு, தேர்​தல் நடத்தை விதி​முறை​களில் உரிய திருத்​தம் செய்​து, கையில் எடுத்​துச்​செல்​லும் ரொக்​கம் ரூ.50 ஆயிரத்​திலிருந்து ரூ.5 லட்​சம் ரூபா​யாக உயர்த்தி அறிவிக்க வலியுறுத்தி.

தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​பு, திரு​வாரூரில் கடந்த மே 5-ம் தேதி நடை​பெற்ற 43-வது வணி​கர் தினம் மாநாட்​டில் தீர்​மான​மாகக் கொண்டு வந்​திருக்​கிறது.

இயற்கை நீதியை நிலை​நாட்​ட​, பொது​மக்​கள் நலனை​ கவனத்​தில் கொண்​டு, தேர்​தல் நடத்தை விதி​முறைகளில் மாற்​றங்​கள் கொண்​டு வந்​து, பணப்​பரிவர்த்​தனை ரூ.5 லட்​சம் என உயர்த்தி அறிவிக்க வேண்​டும் என அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT