தமிழகம்

சிபிஐ சம்மன் அனுப்பினால் ஆஜராவேன்: விஜயபாஸ்கர்

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் சம்​பவம் தொடர்​பாக சிபிஐ சம்​மன் வந்​தால் டெல்லி செல்ல தயார் என முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் தெரி​வித்​தார்.

கரூரில் அதி​முக நிர்​வாகி​கள் கூட்டத்தில், அவர் பேசும்போது, கரூரில் 41 அப்​பாவி​கள் உயி​ரிழக்க காரண​மானவர்​கள் தண்​டிக்​கப்பட வேண்​டும் என்று சொன்​னேன்.

          

இதில், முன்​னாள் அமைச்​சருக்கு சம்​மன் வந்​துள்​ளது குறித்து கருத்து தெரி​வித்தேன். ஆனால் அவர் மருத்​து​வ​மனைக்கு சென்​றவர்​களுக்​கும் சம்​மன் வர வேண்​டும் என்​கிறார்.

நானும் மருத்​து​வமனை சென்​றேன். எனக்கு சிபிஐ சம்​மன் வந்​தால், நான் அதற்கு தயார். டெல்​லி சென்று நடந்​ததை கூறு​வேன். என்​ மேல் எந்தத் தவறும் இல்​லை என்றார்.

SCROLL FOR NEXT