கிருஷ்ணகிரி: தேமுதிகவுக்கு 25 ஆண்டுகளாக மக்கள் அங்கீகாரம் தரவில்லை என கிருஷ்ணகிரியில் அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: தவெக அரசு, தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, திட்டத்தை ரத்து செய்து வேறு இடத்துக்கு மாற்ற உள்ளனர். ஆனால், தற்போது செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய விமானநிலையம் அமைக்க தமிழக அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.
அப்போது அங்குள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படாதா, ஏற்கெனவே பரந்தூரில் 40 சதவீதம் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ள நிலையில், அந்த நிலத்தை வழங்கிய விவசாயிகள் என்ன ஏமாளிகளா. இவ்வாறு அவர் பேசினார்.