மதுரை​யில் செய்​தி​யாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்​திர பிதாரி.

 
தமிழகம்

வாகன விபத்தை தாக்குதலாக திரித்து வீடியோ வெளியீடு: தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: தேனி அருகே நடந்த விபத்து சம்​பவத்தை கர்​நாடக பக்​தர்​கள் மீதான தாக்​குதலாக திரித்து சமூக ஊடகங்​களில் வீடியோ வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்​திர பிதாரி தெரி​வித்​தார்.

கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் பகு​தி​யைச் சேர்ந்த ஐயப்ப பக்​தர்​கள் வேன், கார்​களில் கடந்த 12-ம் தேதி சபரிமலைக்​குச் சென்​றனர். தேனி அருகே திண்​டுக்​கல்​-தேனி புறவழிச்சாலை​யில் சென்​ற​போது, அவர்​களது வேன் மீது பின்​னால் வந்த லாரி மோதி​யது. இதில் வேனின் பின்​பகு​தி​யில் இருந்த கண்​ணாடி சேதமடைந்​தது.

இது தொடர்​பாக லாரி ஓட்​டுநர் மற்​றும் பக்​தர்​கள் குழு​வினருக்கு இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. அப்​பகு​தி​யில் உள்ள சிலர் லாரி ஓட்​டுநருக்கு ஆதர​வாக வந்​தனர். தகவலறிந்த தேனி போலீ​ஸார் அங்கு வந்​து, இரு தரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்தி அனுப்பி ​வைத்​தனர்.

இந்​நிலை​யில், கர்​நாடக பக்​தர்​கள் தமிழகத்​தில் தாக்​கப்​பட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் வீடியோ பரவியது. இதுகுறித்து அறிந்த தேனி காவல் கண்​காணிப்​பாளர் சினேகப்​பிரி​யா, விபத்து மற்​றும் போலீஸ் நடவடிக்கை குறித்து விளக்​கி, சாம்​ராஜ் நகர் காவல் கண்​காணிப்​பாள​ருக்கு கடிதம் அனுப்​பி​னார்.

தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்​திர பிதாரி மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: சம்​பவம் நடந்​த​போது பாதிக்​கப்​பட்ட நபர்​களை காவல் நிலை​யம் வந்து புகார் அளிக்​கு​மாறு தேனி போலீ​ஸார் அறி​வுறுத்​தினர். ஆனால், இரு தரப்​பும் பேசி சமரசம் ஏற்​பட்​டு, வேன் கண்​ணாடியை சரி செய்ய லாரி ஓட்​டுநர் ரூ.1,000 கொடுத்​துள்​ளார். பின்​னர் கர்​நாடக ஐயப்ப பக்​தர்​கள் புறப்​பட்​டுச் சென்​று​விட்​டனர். எனினும், விபத்து குறித்து அல்​லிநகரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, லாரி ஓட்​டுநர் தரப்​பைச் சேர்ந்த ஒரு​வரை கைது செய்​தனர்.

ஆனால், இச்​சம்​பவம் குறித்து சமூக ஊடகங்​களில் சிலர் தவறான தகவலை பரப்ப முயற்​சிக்​கின்​றனர். விபத்​தில் யாருக்​கும் எந்த பாதிப்​போ, பெரிய சேத​மும் இல்​லை. இரு தரப்​பினரும் மொழி புரி​யாமல் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தாகத் தெரி​கிறது.

சமூக ஊடகங்​களில் வீடியோ வெளி​யிடப்​பட்​டது குறித்து கர்​நாடக போலீ​ஸாரும் ஒரு​வர் மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார். திண்​டுக்​கல் டிஐஜி சுவாமி​நாதன், தேனி எஸ்​.பி. சினேகபிரி​யா, மதுரை எஸ்​.பி. அரவிந்த் உடனிருந்​தனர்.

SCROLL FOR NEXT