சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, வணிகப் பொருட்களை ரூ.5 லட்சம் மதிப்புவரை தடையின்றி வணிகர்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பொருட்களை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.