அசோக வனத்தில் உள்ள அனுமன் கோயிலில் தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

 
தமிழகம்

இலங்கையிலுள்ள சீதை அம்மன் கோயிலில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வழிபாடு

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையிலுள்ள சீதை அம்​மன் கோயி​லில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்​தார். இலங்கைக்கு 2 நாள் அரசு​முறைப் பயண​மாக நேற்று முன்​தினம் சென்ற அவர், அதிபர் அனுர குமார திச​நாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்​கட்​சித் தலை​வர் சஜித் பிரேமதாசா உள்​ளிட்ட முக்​கிய பிர​முகர்களைச் சந்​தித்​தார்.

மேலும், இந்​திய வம்​சாவளி தமிழ் சமூகத் தலை​வர்​களை​யும், வடக்கு மற்​றும் கிழக்கு பிராந்​தி​யங்​களைச் சேர்ந்த தமிழ் தலை​வர்​களை​யும் சந்​தித்து கலந்​துரையாடி​னார். இரண்​டாவது நாளான நேற்​று, குடியரசு துணைத் தலை​வர் நுவரெலியா மாவட்​டத்​தி​லுள்ள ராகலா, லிட்​டில் ஸ்டேல் எஸ்​டேட்​டில் இந்​திய வீட்​டு​வச​தித் திட்​டத்​தின்கீழ் கட்​டித் தரப்​பட்ட வீடு​களை பார்​வை​யிட்​டு, பயனாளி​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

‘இலங்​கை​யில் உள்ள தமிழ் மக்​களின் நலனுக்​காக இந்​திய அரசும், மக்​களும் ஆழ்ந்த அர்ப்​பணிப்​புடன் உள்​ளனர். இலங்​கை​யின் வடக்கு மற்​றும் கிழக்கு மாகாணங்​களில் உள்ள தமிழ் குடும்​பங்​களுக்​கும், தோட்​டப் பகு​தி​களில் உள்ள இந்​திய வம்​சாவளி தமிழ் குடும்​பங்​களுக்​கும், இந்​திய அரசு இது​வரை 50,000 வீடு​களைகட்​டித் தந்​துள்​ளது.

கூடுதலாக 10,000 வீடு​கள் கட்​டித்தரப்​படும்’ என அப்போது தெரி​வித்​தார். ராமாயணத்​தில் அசோகவனம் என வர்​ணிக்​கப்​பட்ட பகு​தி, தற்​போது ‘சீதா எலிய’ என்ற இடத்தில் அமைந்​துள்ளது.

இங்கு சீதை அம்​மனுக்கு கோயில் அமைந்துள்​ளது. சி.பி.​ரா​தாகிருஷ்ணன் இந்தக் கோயிலில் வழிபட்​டார். பின்னர் அனு​மன் கோயி​லிலும் வழிபட்​டார்.

ராமாயணத்​துடன் தொடர்​புடைய இந்த புனிதக் கோயில், இந்​தி​யா​வுக்​கும், இலங்​கைக்​கும் இடையி​லான ஆழமான கலாச்​சார மற்​றும் நாகரி​கத் தொடர்​பு​களுக்கு ஒரு ஆழ்ந்த நினை​வூட்​டலாக விளங்​கு​கிறது என அவர் தெரி​வித்​தார். முன்​ன​தாக, சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு சீதை அம்​மன் கோயி​லில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT